பிரித்தானியாவில் ’ஈரானின் ஸ்லீப்பர் செல்கள்’: ஒரு திடுக் தகவல்
ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் பதில் தாக்குதல் நடத்திவருகிறது.
நேரடியாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் கைகோர்க்காவிட்டாலும், பிரித்தானிய ராணுவ தளங்களை பயன்படுத்திக்கொள்ள அமெரிக்காவுக்கு பிரித்தானியா அனுமதி அளித்த விடயமே, பிரித்தானியாவை ஈரானின் கோபத்துக்கு ஆளாக்கியுள்ளது.

அதைத் தொடர்ந்து, சில பிரித்தானிய ராணுவ தளங்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளதால், இஸ்ரேல் ஈரான் மோதலில் தேவையில்லாமல் தலையிட்டு வம்பை விலைக்கு வாங்கிக்கொண்டது போல் ஆகிவிட்டது பிரித்தானியாவின் நிலைமை!
இந்நிலையில், பிரித்தானியாவில் தனது ஸ்லீப்பர் செல்களை ஈரான் தூண்டிவிட்டிருக்கலாம் என பாதுகாப்புத்துறை நிபுணர்கள் வெளியிட்டுள்ள தகவல் திடுக்கிடவைத்துள்ளது.
பிரித்தானியாவில் ’ஈரானின் ஸ்லீப்பர் செல்கள்’
பாதுகாப்புத்துறை நிபுணரான Dr. Andreas Krieg என்பவர், ஈரானின் துணை ராணுவ போராளிகள் அமைப்பான Basij என்னும் அமைப்புடன் தொடர்புடையவர்கள் பிரித்தானியாவிலிருந்து செயல்படக்கூடும் என எச்சரித்துள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

மேலும், துறைசார் நிபுணர்களில் ஒருவரான Rafe Pilling என்பவர், ஈரான் பிரித்தானியாவில் சைபர் தாக்குதல்களில் ஈடுபடக்கூடும் என்கிறார்.
உதாரணமாக, ஏற்கனவே ஹோர்மூஸ் ஜலசந்தியில் ஈரான் உருவாக்கியுள்ள பிரச்சினையால் எண்ணெய் மற்றும் எரிவாயு பிரச்சினைகள் எதிர்பார்க்கப்படும் நிலையில், மத்திய கிழக்கிலுள்ள பிரித்தானிய எரிசக்தி அமைப்பின் விநியோகம் சைபர் தாக்குதலுக்கு உள்ளானால், அது பிரித்தானியர்களை பாதிக்கக்கூடும் என்கிறார் அவர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |