ட்ரம்பின் வரி விதிப்புகள் பொருளாதார மந்த நிலையை உருவாக்கலாம்: பிரான்ஸ் நிபுணர் அச்சம்
ட்ரம்பின் வரிவிப்புகள் பொருளாதார மந்த நிலையை உருவாக்கக்கூடும் என பிரான்ஸ் துறைசார் நிபுணர் ஒருவர் அச்சம் தெரிவித்துள்ளார்.
பொருளாதார மந்த நிலையை உருவாகலாம்
ட்ரம்ப் மானாவாரியாக பல நாடுகள் மீது கூடுதல் வரிகள் விதித்துவருகிறார். இதனால் உலக பொருளாதாரம் பாதிக்கப்படும் என நிபுணர்கள் பலர் தொடர்ந்து எச்சரித்துவருகிறார்கள்.
அவ்வகையில், பிரான்ஸ் தொழில் முனைவோர் இயக்கம் (Mouvement des Entreprises de France, MEDEF) என்னும் அமைப்பின் தலைவரான பாட்ரிக் மார்ட்டின் என்பவர், ட்ரம்பின் வரி விதிப்புகள் கவலையை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் வரி விதிப்புகளால், பொருளாதார வளர்ச்சி தடைபடும் அபாயம் உள்ளது என்றும், பொருளாதார மந்த நிலையை உருவாகக்கூடும் என தான் அஞ்சுவதாகவும் தெரிவித்துள்ளார் பாட்ரிக்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |