புடின் உலகை அழிக்கத் துடிப்பதற்கு அவரது நோய்தான் காரணம்: பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ள நிபுணர்
புடின் உலகை அழிக்கத் துடிப்பதற்கு அவருக்கு உருவாகியுள்ள நோய் காரணமாக இருக்கலாம் என உலகப் புகழ் பெற்ற உடல் மொழி நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
'Mr Body Language' என்று அழைக்கப்படும் Allan Pease, தனக்கு புடினை 30 ஆண்டுகளாக தெரியும் என்றும், புடின் திடீரென எடை அதிகரித்துள்ளது தனக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றும், அவரது நடவடிக்கைகளில் மாற்றம் தெரிவதாகவும், அதற்குக் காரணம் அவரது உடல் நலப் பிரச்சினைகள்தான் என்றும் கூறியுள்ளார்.
பிட்னஸுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் புடின், இப்போதைக்கு உடற்பயிற்சி செய்வது போல் தெரியவில்லை என்று கூறும் Allan, புடினுக்கு புற்றுநோய் அல்லது பார்க்கின்சன் நோய் உருவாகியிருக்கலாம் என ரஷ்யாவில் வதந்திகள் உலாவருவதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், முன்பு எதையும் பொறுப்பேற்று உறுதியாக முன்னின்று நடத்தும் புடின், தற்போது தன்னை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்திக்கொள்வதாக தெரிவிக்கும் Allan, சமீபத்தில் ஊடகங்களில் வெளியான புகைப்படங்களில், புடின் ஒரு நீண்ட மேஜையில் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்ததை சுட்டிக்காட்டுகிறார்.
தன்னை யாரேனும் தாக்கலாம் என புடின் கருதுவதாக Allan தெரிவிக்கிறார்.
அவரது உடல் எடை கணிசமாக அதிகரித்துள்ளது, அவர் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்கிறார், யார் தன்னை சந்திக்க வந்தாலும், தனக்கு எதிராக தூரத்தில் அவர்களை அமரவைக்கிறார்.
ஆக, அவர் மனதில் ஏதோ ஓடிக்கொண்டிருக்கிறது. யாருடனும் இருக்க அவர் விரும்பவில்லை.
எனவே, அவரது நோய்கள்தான் அவர் உக்ரைன் மீது போர் தொடுக்க காரணமாக இருக்கலாம் என தான் கருதுவதாக தெரிவிக்கும் Allan, இதற்கு முன், 2014ஆம் ஆண்டு, தான் புடினை குளிர்கால ஒலிம்பிக் போட்டியின்போது பார்த்ததாகவும், அப்போது அவர், 1991இல் தான் பார்த்த புடினைப்போலவே இருந்ததாகவும், ஆனால் இப்போதோ, அவர் மாறிவிட்டதாகவும், அவரது முகம் கூட வீங்கியிருப்பதுபோல தெரிவதாகவும் தெரிவித்துள்ளார்.