ஏவுகணைகள் மழையாக... இந்தியா-பாகிஸ்தான் போரின் செலவுகள் குறித்து நிபுணர்கள்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு தேசியவாதம் அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தானுடனான போரை பொதுமக்கள் தூண்டிவிடக் கூடாது என்று முன்னாள் தூதர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
திருப்திப்படுத்தும் வகையில்
பாகிஸ்தானுக்கான முன்னாள் உயர் ஸ்தானிகர் அஜய் பிசாரியா, அத்தகைய நடவடிக்கையின் முக்கிய அம்சங்களையும் எடுத்துரைத்துள்ளார். மட்டுமின்றி போரினை முன்னெடுக்கும் நேரம் மக்கள் என்ன உணர்கிறார்கள் என்பதைப் பொறுத்தும் இருக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலை அடுத்து பாகிஸ்தானை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற கூச்சல் பெரும்பான்மை சமூக மக்களிடம் ஓங்கியுள்ளது. மட்டுமின்றி, ஏற்கனவே இஸ்லாமிய சமூக மக்களை அவர்கள் எதிரியாகவே பாவித்து வரும் சமீபத்திய காலகட்டத்தில், அவர்களை திருப்திப்படுத்தும் வகையில் ஆளும் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையிலேயே பாகிஸ்தானுக்கான முன்னாள் உயர் ஸ்தானிகர் அஜய் பிசாரியா தமது கருத்துக்களை முன்வைத்துள்ளார். எந்தவொரு செயல்பாடும் வெற்றிபெற, மூன்று கூறுகள் தேவை என குறிப்பிட்டுள்ள அவர் வேகம், வியக்கவைத்தல் மற்றும் ரகசியம் என தெரிவித்துள்ளார்.
இதனால், பாகிஸ்தானுக்கு பதிலடி தரவேண்டும் என இந்தியா முடிவு செய்திருந்தால், அது பொதுமக்களின் மனநிலையை உணர்ந்து செயல்படுவதாக இருத்தல் கூடாது என தெரிவித்துள்ளார்.
கடந்த 2017 முதல் 2020 வரையில் பாகிஸ்தானில் உயர் ஸ்தானிகராக செயல்பட்ட அஜய் பிசாரியா, நிலைமை மோசமடைந்தால் மட்டுமே தானாகவே போரில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்படும் என்றார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதக் குழுவுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளால் 26 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் அஜய் பிசாரியாவின் கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
கடும் நெருக்கடி
இதனிடையே, திட்டமிடல் விவகார நிபுணரான சுஷாந்த் சரீன் தற்போதைய உலகளாவிய பொருளாதார நெருக்கடி நிலையில், போரின் பாரிய செலவுகள் குறித்து எச்சரித்துள்ளார்.
இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவருக்கொருவர் தங்களின் முதன்மையான நகரங்கள் மீது ஏவுகணைகளை வீசும் அளவுக்கு நிலைமை மோசமடைந்தால் இரு நாடுகளும் பாதிக்கப்படக்கூடியதாகிவிடும் என்றார்.
இருநாடுகளும் ஏவுகணைகளை பயன்படுத்தும் மிக மோசமான நெருக்கடிக்கு நிலைமை தள்ளப்பட்டால், இஸ்லாமாபாத்தும் லாகூரும் பாதிக்கப்படக்கூடியவை என்றால், டெல்லியும் கடும் நெருக்கடியை எதிர்கொள்ளும் என்றார்.
1999 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போரில் இந்தியாவுக்கு ஒரு நாளைக்கு தோராயமாக ரூ.15 கோடி செலவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறுகிய கால போர் என்றாலும் கூட ஏற்படுத்தக்கூடிய மகத்தான நிதி நெருக்கடியை எடுத்துக்காட்டுகிறது என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |