விசா ஒன்றை நிறுத்த பிரித்தானியா திட்டம்: தவறான முடிவு என்கிறார்கள் துறைசார் அலுவலர்கள்
புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள் என்ற பெயரில் வரிசையாக அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறார் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்.
அவற்றில் ஒன்று, முதியவர்கள், இயலாமை கொண்டவர்கள் முதலானவர்களை கவனித்துக்கொள்ளும் Care worker என்னும் பணியைச் செய்வதற்காக, வெளிநாட்டிலிருந்து விண்ணப்பிப்பவர்களுக்கு வழங்கப்படும் விசாக்களை நிறுத்துவதாகும்!
அதற்கு பதிலாக ஏற்கனவே பிரித்தானியாவில் இருப்பவர்களிலிருந்தே ஆட்களை வேலைக்கு எடுக்க திட்டம் வைத்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
அரசாங்கம் தவறாகப் புரிந்துகொண்டுள்ளது
புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள் என்னும் பெயரில் பிரித்தானியா எடுத்துவரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, Care worker விசாக்களை நிறுத்த முடிவு செய்துள்ளதாக உள்துறைச் செயலரான Yvette Cooper தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த விடயத்தில் அரசாங்கத்தின் புரிதல் தவறானது என்கிறார்கள் துறைசார் அலுவலர்கள். Care England என்னும் துறைசார் அமைப்பு, அரசின் இந்த முடிவு ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் துறைக்கு மேலும் ஒரு பலத்த அடி என்று கூறியுள்ளது.
Independent Care Group என்னும் அமைப்பின் தலைவரான Mike Padgham, இந்த விடயத்தை அரசு தவறாகப் புரிந்துகொண்டுள்ளது என்கிறார்.
நாங்கள் Care துறைக்கு பிரித்தானியாவிலிருந்தே ஆட்களை வேலைக்கு எடுக்க முயல்கிறோம், ஆனால், தேவையான அளவில் ஆட்கள் இந்த நாட்டில் கிடைக்கவில்லை என்கிறார்.
ஆக, அரசின் இந்த முடிவு, முதியவர்கள் மற்றும் இயலாமை கொண்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமையக்கூடும் என அஞ்சப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |