லெபனான் பேஜர் வெடிப்பு விவகாரம்... இந்திய வம்சாவளி நபர் மீது சர்வதேச தேடல் கோரிக்கை
லெபனானின் ஹிஸ்புல்லா படைகளுக்கு பேஜர்கள் விற்பனை செய்த விவகாரத்தில், இந்திய வம்சாவளி நபர் மீது நோர்வே சர்வதேச தேடல் கோரிக்கை விடுத்துள்ளது.
தொழில்முறை பயணம்
குறித்த பேஜர்களே கடந்த வாரம் வெடித்ததுடன், இந்த விவகாரத்தில் இஸ்ரேலின் பங்கிருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், 39 வயதான ரின்சன் ஜோஸ் அமெரிக்காவில் தொழில்முறை பயணம் மேற்கொண்டிருந்ததை அடுத்து மாயமாகியுள்ளார்.
ஹிஸ்புல்லாவுக்கு பேஜர்கள் விநியோகம் செய்த நிறுவனங்களில் ஒன்றின் நிறுவனர் இந்த ரின்சன் ஜோஸ். செப்டம்பர் 25ம் திகதி பேஜர் வழக்கு தொடர்பாக மாயமான நபர் தொடர்பில் பிகார் ஒன்று ஒஸ்லோ காவல்துறை மாவட்டத்திற்கு கிடைத்துள்ளதாக, பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து விசாரணை துவங்கியுள்ளதாகவும், அந்த நபருக்கு எதிராக சர்வதேச வாரண்ட் அனுப்பியுள்ளதாகவும் ஒஸ்லோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். செப்டம்பர் 18ம் திகதி பேஜர் விவகாரம் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு ஜோஸ் பதிலளிக்க மறுத்துள்ளார்.
எவ்வித தொடர்பும் இல்லை
மட்டுமின்றி, பல்கேரிய தொழில் குறித்தும் அவரை தொடர்புகொள்ள முயன்று அதிகாரிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இதனிடையே, ஜோஸ் பணியாற்றும் DN Media குழுமம் தெரிவிக்கையில், அமெரிக்காவில் தொழில்முறை பயணம் மேற்கொண்டுள்ளதாகவும்,
செப்டம்பர் 18 முதல் தங்களால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என குறிப்பிட்டுள்ளனர். அந்த நிறுவனத்தில் ஜோஸ் விற்பனை பிரிவில் பணியாற்றி வருகிறார்.
2022ல் பல்கேரியாவில் Norta Global Ltd என்ற நிறுவனத்தை ஜோஸ் நிறுவியுள்ளார். பல்கேரியா அரசாங்கம் முன்னெடுத்த விசாரணையில், லெபனானில் பேஜர் வெடிப்புக்கும் Norta Global Ltd என்ற நிறுவனத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றே உறுதி செய்துள்ளது.
ரின்சன் ஜோஸ் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |