தாய்லாந்து எண்ணெய் சேமிப்பு கிடங்கில் மிகப்பெரிய வெடிப்பு: பொதுமக்கள் வெளியேற உத்தரவு
Explosion at Bangkok oil depot: தாய்லாந்து எண்ணெய் சேமிப்பு கிடங்கில் மிகப்பெரிய வெடிப்பு விபத்து ஏற்பட்டுள்ளது.
எண்ணெய் சேமிப்பு கிடங்கில் வெடிப்பு
வியாழக்கிழமை காலை தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்கில் எதிர்பாராத விதமாக திடீர் வெடிப்பு விபத்து ஏற்பட்டது.
இந்த வெடிப்பு விபத்தினால் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதை தொடர்ந்து, எண்ணெய் கிடங்கு வளாகத்தை சுற்றியுள்ள வீடுகள், அலுவலகங்கள், மற்றும் பள்ளிகளில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த வெடிப்பு விபத்தானது Phra Khanong மாகாணத்தின் Sukhumvit 62 பகுதியில் அமைந்துள்ள 'பாங்சாக்' (Bangchak) என்ற எண்ணெய் கிடங்கிலேயே ஏற்பட்டுள்ளது.

வெடிப்பின் அதிர்வுகள் மிக பலமானதாக உணரப்பட்டதோடு, பல கிலோமீட்டர் சுற்றளவில் இருந்த வீடுகள் மற்றும் ஜன்னல்கள் பலமாக குலுங்கின.
அத்துடன் பல கிலோமீட்டர் சுற்றளவுக்கு கரும்புகை சூழ்ந்து கொண்ட காட்சிகளும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீவிரப் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு படையினரின் ஒருவழியாக தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதிர்ஷ்டவசமாக இந்த பயங்கர விபத்தில் உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.