மசூதியில் தொழுகையின் போது திடீர் குண்டு வெடிப்பு: பள்ளி வளாகத்தில் பயங்கரம்
இந்தோனேசியாவில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் டஜன் கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.
மசூதியில் குண்டு வெடிப்பு
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது திடீர் குண்டு வெடிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.
பள்ளி வளாகத்திற்கு அமைந்துள்ள மசூதியில் ஏற்பட்ட இந்த சம்பவத்தை தொடர்ந்து 54 பேர் வரை படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

அத்துடன் குண்டு வெடிப்பிற்கான காரணத்தை தீவிரமாக விசாரித்து வருவதாக நகர காவல் துறைத் தலைவர் ஆசெப் எடி சுஹேரி தெரிவித்துள்ளார்.
அந்நாட்டு செய்தி சேனல்களில் வெளியான காட்சிகளில் பள்ளி வளாகத்தை சுற்றி பொலிஸார் தடுப்புகள் அமைத்து இருப்பதும், ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதையும் பார்க்க முடிகிறது.
முதற்கட்டமாக வெளியான புகைப்படங்களில் திடீர் குண்டுவெடிப்பு சம்பவத்தால் மசூதியில் பெரிய அளவிலான சேதம் ஏற்படவில்லை என தெரியவருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |