மாஸ்கோ உணவகத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் உயிரிழப்பு: பின்னணியில் இருப்பது யார்?
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 3 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
மாஸ்கோவில் குண்டு வெடிப்பு
மாஸ்கோவின் மத்திய பகுதியான குத்ரின்ஸ்காயா சதுக்கத்தில்(Kudrinskaya Square) அமைந்துள்ள கஃபே ஒன்றில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த குண்டுவெடிப்பில் 3 பேர் வரை உயிரிழந்து இருப்பதுடன், 15 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
குண்டு வெடிப்பை தொடர்ந்து உள்துறை அமைச்சக அதிகாரிகளும், மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

மீட்பு படையினர் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு தேவையான மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வருவதாக ரஷ்ய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை மாலை நிகழ்ந்த இந்த குண்டு வெடிப்பானது, பால்சி ரோஸ்லி(Balzi Rossi) என்ற சொகுசு உணவு விடுதியில் நடைபெற்ற தனியார் கூட்டத்தின் போது நிகழ்ந்துள்ளது.
குண்டுவெடிப்பிற்கு பின்னால் இருப்பது யார்?
இந்நிலையில் மாஸ்கோ தலைநகரில் அமைந்துள்ள பால்சி ரோஸ்லி உணவகத்தில் இந்த நாட்டு வெடிகுண்டின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பதை ரஷ்ய அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதையும் ரஷ்ய அதிகாரிகள் வெளியிடவில்லை என்றாலும், இந்த குண்டு வெடிப்பின் பின்னணியில் உக்ரைன் இருக்கலாம் என்று ரஷ்யா சந்தேகப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |