ஆப்கானிஸ்தானில் பள்ளிக்கு அருகே பயங்கர வெடிப்பு: 7 மாணவர்கள் பலி, 97 பேர் படுகாயம்
Explosion Near School in Afghanistan 7 students dead: ஆப்கானிஸ்தானில் பள்ளி கட்டிடம் அருகே நிகழ்ந்த பயங்கர வெடி விபத்து சம்பவத்தில் 7 மாணவர்கள் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
7 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிக்கு அருகில் நிகழ்ந்த சக்திவாய்ந்த வெடி விபத்து சம்பவத்தில் குறைந்தது 7 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
சனிக்கிழமை நிகழ்ந்த இந்த வெடிப்பு விபத்து சம்பவத்தில் குறைந்தது 97 பேர் வரை பலத்த காயமடைந்து இருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
பள்ளி கட்டிடத்திற்கு அருகில் அமைந்துள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் சுரங்க பணிகளுக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் வெடித்ததே இந்த கோர சம்பவத்திற்கான முக்கிய காரணம் என்று உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இலவச சுற்றுலா என நம்பி ஏமாந்த ஆட்டிசம் பாதித்த பிரித்தானிய இளைஞர்: துருக்கியில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெறும் ஆபத்து
வெடிப்பு விபத்தை தொடர்ந்து இதில் காயமடைந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக மீட்கப்பட்டு நங்கர்ஹார் மண்டல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை குனார் மாகாண தகவல் மற்றும் கலாச்சாரத் துறை இயக்குநர் சமிஉல் ஹக் பயான் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த வெடிப்பு விபத்து காரணமாக அந்த கட்டிடத்திற்கு அருகில் அமைந்திருந்த பல வீடுகளும் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.