பிரித்தானியாவின் காட்விக் விமான நிலையத்தில் வெடிப்பு சம்பவம்: பீதியில் உறைந்த பயணிகள்!
பிரித்தானியாவின் காட்விக் விமான நிலையத்தில் திடீரென கார் வெடித்து தீப்பிழம்பு வந்ததால் பயணிகள் பீதியடைந்தனர்.
காட்விக் விமான நிலையத்தில் வெடித்த கார்
பிரித்தானியாவின் காட்விக் விமான நிலையத்தில்(Gatwick Airport) உள்ள கார் பார்க்கிங் 6-ல் நிறுத்தப்பட்டிருந்த கருப்பு நிற வோக்ஸ்வாகன் கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த தீ விபத்தின் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், அதில் கார் தீப்பிடித்து எரிவதையும் வானில் புகை மற்றும் தீப்பிழம்புகள் எழுவதையும் பார்க்க முடிகிறது.
U.K: A car caught fire at Gatwick Airport earlier today, briefly cutting off access to the North Terminal. The flames even reached the car park barriers before fire crews got it under control 🚗🔥pic.twitter.com/mRi1WHWeQ6
— Volcaholic 🌋 (@volcaholic1) April 13, 2025
இந்த தீ விபத்தில் கார் முற்றிலும் எரிந்து சாம்பலானது. காரின் டயர்கள் வெடித்ததால் ஏற்பட்ட வெடி சத்தங்கள், பயணிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.
தீயை அணைக்க முயன்ற வேன் சாரதி
இந்த அசாதாரண சூழ்நிலையில், அருகில் இருந்த AA வேன் சாரதி தீயை அணைக்க தீயணைப்பான் உதவியுடன் முயற்சித்தார்.
இருப்பினும், தீயின் தீவிரம் அதிகமாக இருந்ததால் தொழில்முறை தீயணைப்பு வீரர்களின் உதவி தேவைப்பட்ட நிலையில், வெஸ்ட் சசெக்ஸ் தீ மற்றும் மீட்பு சேவையின் (WSFRS) இரண்டு தீயணைப்பு வண்டிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டு தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் தீ விபத்தினால் விமான நிலையத்தின் செயல்பாடுகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இதில் பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் என யாருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |