ரஷ்யாவிலிருந்து நூற்றுக்கணக்கான ஜேர்மானியர்கள் வெளியேற்றம்

United Russia Germany
By Balamanuvelan May 29, 2023 01:02 PM GMT
Report

ரஷ்யாவில், கல்வி மற்றும் கலாச்சாரத்துறையில் பணியாற்றுவோர் உட்பட, நூற்றுக்கணக்கான ஜேர்மானியர்கள் அடுத்த மாதம் ரஷ்யாவிலிருந்து வெளியேற்றப்பட இருப்பதாக ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜேர்மன் பணியாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த திட்டம்

ரஷ்யா, ஜேர்மனியில் வாழும் ஜேர்மன் பணியாளர்களின் எண்ணிக்கையை, ஜூன் மாத துவக்கம் முதல் கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், அந்த செய்திகளை ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் உறுதிசெய்துள்ளது.

அப்படி வெளியேற்றப்பட உள்ளவர்களில் மாஸ்கோவிலுள்ள ஜேர்மன் பள்ளி ஆசிரியர்களும், Goethe கலாச்சாரக் கூட்டமைப்பு நிறுவன ஊழியர்களும் அடங்குவர். 

ரஷ்யாவிலிருந்து நூற்றுக்கணக்கான ஜேர்மானியர்கள் வெளியேற்றம் | Expulsion Of Hundreds Of Germans From Russia

GETTY IMAGES

பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கை

ரஷ்யாவுக்கும், ஜேர்மனிக்குமிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு வரும் நிலையில், பழிக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக, இரு நாடுகளும் தத்தம் தூதரக அதிகாரிகளை வெளியேற்றியதைத் தொடர்ந்து தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

சென்ற மாதம் ரஷ்யாவும் ஜேர்மனியும் முறையே மற்ற நாட்டின் 40 தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது நினைவிருக்கலாம்.

இந்நிலையில், தற்போது ரஷ்யா எடுக்கவிருக்கும் நடவடிக்கையின்கீழ், தூதரக அதிகாரிகள் உட்பட நூற்றுக்கணக்கான ஜேர்மானியர்கள் ரஷ்யாவிலிருந்து வெளியேற்றப்பட உள்ளதாக ஜேர்மன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

ரஷ்யாவிலிருந்து நூற்றுக்கணக்கான ஜேர்மானியர்கள் வெளியேற்றம் | Expulsion Of Hundreds Of Germans From Russia

 ABC

ஏற்கனவே ரஷ்யாவுக்கும் ஜேர்மனிக்குமிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு வரும் நிலையில், கல்வி மற்றும் கலாச்சாரத்துறையில் பணியாற்றுவோர் மற்றும் தூதரக அதிகாரிகள் என நூற்றுக்கணக்கான ஜேர்மானியர்கள் அடுத்த மாதம் ரஷ்யாவிலிருந்து வெளியேற்றப்பட உள்ளதால், இரு நாடுகளுக்குமிடையிலான உறவு மேலும் மோசமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US