கனடா, இந்தியா உறவில் விரிசலா? வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கை
கனடாவில் சீக்கியர் தின நிகழ்ச்சியில் 'காலிஸ்தான்' குறித்து கோஷம் எழுப்பியதற்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
கல்சா தினம்
ரொறன்ரோவில் நடைபெற்ற கல்சா தினம் எனும் சீக்கிய நிகழ்ச்சியில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்துகொண்டார்.
கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அவர் சீக்கிய சமூகத்தினரிடம் உரையாற்ற மேடைக்கு வந்தார். அப்போது சிலர் காலிஸ்தான் ஆதரவு கோஷங்களை எழுப்பினர்.
இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கான கனடா துணை தூதருக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கண்டன அறிக்கை
மேலும் இதுதொடர்பாக வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பிரிவினைவாதம், பயங்கரவாதம் மற்றும் வன்முறைக்கு கனடா மீண்டும் இடமளித்துள்ளதை இது மீண்டும் ஒருமுறை எடுத்துக் காட்டுகிறது. காலிஸ்தான் ஆதரவு முழக்கங்களை எழுப்பியது இந்தியா, கனடா உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, காலிஸ்தான் ஆதரவு கோஷங்களை புறக்கணித்த ட்ரூடோ, நாட்டில் உள்ள சீக்கியர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாக்க தமது அரசு எப்போதும் துணை நிற்கும் என்று அவர் உறுதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |