மொத்தமாக 110 மில்லியன் மக்கள் பாதிப்பு... 38 நகரங்களில் உச்சம் தொட்ட வெயில்
அமெரிக்காவின் தென் மேற்கு பகுதி மொத்தமாக வெப்ப அலை தாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மொத்தமாக 110 மில்லியன் மக்கள் பாதிப்புக்கு இலக்காகியுள்ளதாக கூறப்படுகிறது.
Death Valley-ல் வெப்பநிலை 53.9C
38 நகரங்களில் வெயில் உச்சம் தொட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். லாஸ் வேகஸ் நகரில் ஞாயிறன்று 47.2C வெப்பம் பதிவாகியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸின் புறநகரில் கொளுத்தும் வெயில் மற்றும் குறைந்த ஈரப்பதம் ஆகியவற்றுடன் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் தீயுடன் போராடி வருகின்றனர்.
@reuters
கலிபோர்னியாவின் Death Valley-ல் ஞாயிறன்று வெப்பநிலை 53.9C என பதிவாகியுள்ளதாக கூறுகின்றனர். பொதுவாக நெரிசலான லாஸ் வேகாஸின் தெருக்கள் இயல்பை விட கணிசமாக காலியாக காணப்படுகிறது.
மேலும், மூச்சுத்திணறடிக்கும் அளவுக்கு வெயில் கொளுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர். டெக்சாஸின் எல் பாசோ நகரில் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து 38C அளவுக்கு வெப்பம் பதிவாகி வருகிறது.
@reuters
எதிர்வரும் நாட்களில் இதே நிலை தொடரும் எனவும், சிறார்கள், கர்ப்பிணிகள் மற்றும் முதியோர் ஆகியோருக்கு அதிகாரிகள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
16 நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
இதனிடையே, கடந்த கோடைகாலத்தில் ஐரோப்பா முழுமையும் வெப்ப அலை காரணமாக 61,672 பேர்கள் மரணமடைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் இறப்பு விகிதம் அதிகமாக இருந்துள்ளது.
தெற்கு ஐரோப்பாவில் தொடர்ந்து கடுமையான வெப்பம் நிலவி வருவதால் இத்தாலி முழுவதும் 16 நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
@reuters
ரோம், புளோரன்ஸ் மற்றும் போலோக்னா ஆகிய பகுதிகள் வெப்ப அலையால் பாதிக்கப்பட்ட நகரங்களாக குறிப்பிடுகின்றனர். சீனா, வட ஆப்ரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் சில பகுதிகளிலும் மக்கள் வெப்ப அலைகளை அனுபவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |