ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி போட்டுக்கொண்டவருக்கு ஏற்பட்ட அதிபயங்கர பக்க விளைவுகள்
அமெரிக்காவில், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒருவருக்கு அதிபயங்கர பக்க விளைவுகள் ஏற்பட்டன.
விர்ஜினியாவைச் சேர்ந்த Richard Terrell (74) என்பவர், இம்மாதம் (மார்ச்) 6ஆம் திகதி, ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்பான கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
நான்கு நாட்களுக்குப் பின், அவரது கைகளுக்குக் கீழே அரிப்பு ஏற்பட்டு, அவரது உடல் முழுவதும் பெரிய பெரிய சிவப்புப் புள்ளிகள் தோன்றின.
பின்னர், அவரது கால்கள், கைகள் பயங்கரமாக வீங்கி, அவரது தோல் முதலில் சிவப்பு நிறமாக மாறி, வெடிப்பு ஏற்பட்டு, கடைசியாக தோல் உரிய ஆரம்பித்தது.
தனது தோலில் ஏதோ பிரச்சினை என்று எண்ணிய Richard, மார்ச் மாதம் 19ஆம் திகதி, தோல் நோய் சிகிச்சை நிபுணர் ஒருவரிடம் சென்றார்.
அவரது நிலைமையக் கண்ட அந்த மருத்துவர், உடனே அவரை அவசர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பியுள்ளார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது பிரச்சினைக்கு காரணம் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட அபூர்வ பக்க விளைவுகள் என கண்டறிந்துள்ளார்கள்.
ஐந்து நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளார் Richard.
இது குறித்து அமெரிக்க நோய்த் தடுப்பு மையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

