செங்குத்தாக தரையில் விழுந்து நொறுங்கிய F-16 விமானம்: பதறவைக்கும் வீடியோ காட்சி
அமெரிக்க விமானப் படைக்கு சொந்தமான F-16 ரக போர் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபத்துக்குள்ளான F-16 போர் விமானம்
கலிபோர்னியா பாலைவனத்தில் அமெரிக்க விமானப் படையின் தண்டர்பேர்ட்ஸ்(Thunderbird) சாகச குழுவைச் சேர்ந்த F-16 பால்கன் போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Moment F-16C fighter jet crashes near Trona Airport in California. https://t.co/ND38ddIP5B pic.twitter.com/knsgPCUFsY
— Breaking911 (@Breaking911) December 3, 2025
விமானம் முழுவதுமாக வெடித்து சிதறுவதற்கு சில வினாடிகள் முன்பு போர் விமானத்தின் விமானி பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளார்.
காலை 10.45 மணிக்கு டெத் வேலிக்கு தெற்கே ட்ரோனா விமான நிலையத்துக்கு அருகில் வழக்கமான பயிற்சியின் போது இந்த விபத்து சம்பவமானது அரங்கேறியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வெளியான காட்சிகளில், விமானம் செங்குத்தாக தரையை நோக்கி பாய்வதும், விமானி பாராசூட் மூலம் வெளியே குதிப்பதையும் பார்க்க முடிகிறது.

மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பெரும் தீப்பிழம்பும், அடர்ந்த கருப்பு புகையும் வானில் எழும்பியது.
விபத்துக்கான காரணம் முழுமையாக தெரிய வராத நிலையில், விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாக 57வது விங் பொது விவகார அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |