நடுவானில் இருந்து விழுந்த F-16 ரக போர் விமானம்: உயிர் தப்பினாரா விமானி?
F-16 Fighter jet Crashes in Northern michigan: வடக்கு மிச்சிகனில் F-16 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விபத்துக்குள்ளான F-16 ரக போர் விமானம்
அமெரிக்காவின் வடக்கு மிச்சிகன் மாகாணத்தில் ராணுவத்திற்கு சொந்தமான F-16 ரக போர் விமானம் ஒன்று ட்ராவர்ஸ் சிட்டி(Traverse City) அருகே வியாழக்கிழமை விபத்துக்குள்ளானது.
விமானம் தரையில் விழுந்து நெருங்குவதற்கு முன்னதாக F-16 ரக போர் விமானத்தின் பைலட் பத்திரமாக அதிலிருந்து வெளியேறியதாக ராணுவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் அவர் தற்போது பாதுகாப்பான உடல் நிலையுடன் இருப்பதாகவும் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான F-16 ரக போர் விமானம். டெக்சாஸ் தேசிய பாதுகாப்பு படையின் 149 வது பிரிவை சேர்ந்தது என்று அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
F-16 crashes near Green Lake Township, Michigan. Pilot has reportedly safely ejected. pic.twitter.com/5uVx7pHgIu
— Breaking Aviation News & Videos (@aviationbrk) September 17, 2026
விபத்தை தொடர்ந்து ஜெபர்சன் பிளேஸ் முதல் பிளேர் டவுன்ஷிப் சாலை வரை கவுண்டி சாலை 633-ல் வசிக்கும் மக்கள் அடுத்த அறிவிப்பு வரும் வரை வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.