F1 சாரதிகளில் அதிக வருவாய் ஈட்டவிருக்கும் அந்த ஐவர்: வெளியான பட்டியல்
இந்த ஆண்டில் முன்னெடுக்கப்படவிருக்கும் F1 போட்டிகளில் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் மற்றும் லூயிஸ் ஹாமில்டன் உட்பட முதன்மை சாரதிகள் ஈட்டவிருக்கும் வருவாய் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
முதன்மையான 20 சாரதிகள்
F1 போட்டிகளில் தொடர்ச்சியாக கலந்துகொள்ளும் முதன்மையான 20 சாரதிகள் இந்த ஆண்டில் சுமார் 171 மில்லியன் பவுண்டுகள் வரையில் வருவாயாக ஈட்டுவார்கள் என்றே கூறப்படுகிறது.
@getty
பட்டியலின் கடைசி இடத்தில் 850,000 பவுண்டுகளுடன் Logan Sargeant மற்றும் Yuki Tsunoda ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ளனர். மேலும், ஐந்து சாரதிகள் தலா 1.5 மில்லியன் பவுண்டுகள் வரையில் ஈட்டுவார்கள் என கூறப்படுகிறது.
மூவர் தலா 4 மில்லியன் பவுண்டுகள் வரையில் ஈட்டலாம். ஃபெராரி அணியின் Carlos Sainz இந்த ஆண்டு 10 மில்லியன் பவுண்டுகள் வரையில் ஈட்டலாம். நான்காவது இடத்தில் 16.5 மில்லியன் பவுண்டுகளுடன் Lando Norris உள்ளார்.
லூயிஸ் ஹாமில்டன்
20 மில்லியன் பவுண்டுகளுடன் மூன்றாவது இடத்தில் Charles Leclerc உள்ளார். இரண்டாவது இடத்தில் 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற லூயிஸ் ஹாமில்டன் உள்ளார், இவர் இந்த ஆண்டு அதிக வெற்றிகள் குவிக்க நேர்ந்தால் 29 மில்லியன் பவுண்டுகள் வரையில் ஈட்டலாம்.
@getty
முதலிடத்தில் 45 மில்லியன் பவுண்டுகளுடன் Red Bull அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் உள்ளார்.