5 கோடி மதிப்பிலான கைக்கடிகாரத்தை பறிகொடுத்த பிரபல F1 நட்சத்திரம்
இத்தாலியில் பிரபல F1 நட்சத்திரம் கார்லோஸ் சைன்ஸின் 5 கோடி மதிப்பிலான கைக்கடிகாரம் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
திருடர்களை துரத்திய சைன்ஸ்
இத்தாலியில் நடந்த F1 போட்டியில் மூன்றாவது இடத்தை கைப்பற்றியிருந்தார் ஸ்பெயின் நாட்டின் கார்லோஸ் சைன்ஸ். போட்டி முடிந்து சில மணி நேரத்தில் அவரது கைக்கடிகாரம் கொள்ளயடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
Credit: Rex
உள்ளூர் நேரப்படி 8.30 மணியளவில் அவர் தங்கியிருந்த அர்மானி ஹொட்டலில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் சிலருடன், தமது ஃபெராரி உடையுடனே திருடர்களை சைன்ஸ் துரத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அதிர்ஷ்டவசமாக தமது விலைமதிப்பற்ற ரிச்சர்ட் மில்லே (£500,000) கைக்கடிகாரத்தை மீட்டுள்ளார் என்றே கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் இத்தாலி பொலிசார் இருவரை கைது செய்துள்ளனர்.
முன்னர் பிரித்தானியாவின் Lando Norris என்பவரது ரிச்சர்ட் மில்லே கைக்கடிகாரமும் கொள்ளை போனது. ஆனால் அவருக்கு அந்த கைக்கடிகாரம் திரும்பக் கிடைக்கவில்லை என்பதுடன், கொள்ளையிட்டவர் குற்றவாளி அல்ல எனவும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |