நெருப்புடன் விளையாடுகிறீர்கள் - மேற்கு நாடுகளுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை
'நெருப்புடன் விளையாடுகிறீர்கள்' என ரஷ்யா மேற்கத்திய நாடுகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைனுக்கு வழங்கப்படும் அமேரிக்காவின் F-16 போர் விமானங்கள்
உக்ரைனுக்கு அமெரிக்கா தயாரித்த F-16 போர் விமானங்களை வழங்கும் நடவடிக்கையை கண்டித்து, மேற்கு நாடுகள் நெருப்புடன் விளையாடிக்கொண்டிருப்பதாக ரஷ்யா எச்சரித்துள்ளது.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் (Sergei Lavrov), ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், உக்ரைனுக்கு F-16 போர் விமானங்களை வழங்கும் நடவடிக்கையை மோதலாய் அதிகரிக்கச் செய்யும் செயல் என்றும், "இது சந்தேகத்திற்கு இடமின்றி நெருப்புடன் விளையாடும் செயல்" என்றும் கூறினார்.
Image Source : TWITTER: AMERICAN DEFENCE
ஏனெனில் இது வாஷிங்டன், லண்டன் மற்றும் அவர்களது ஐரோப்பிய ஒன்றிய கூட்டணி நாடுகளின் 'ரஷ்யாவை பலவீனப்படுத்தும்" முயற்சி என்று அவர் கண்டித்தார்.
அமெரிக்காவின் அறிவிப்பு
கடந்த வாரம், ஜோ பைடன் நிர்வாகம், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள தனது நட்பு நாடுகளை உக்ரைனுக்கு F-16 போர் விமானங்களை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பதாக அறிவித்தது.
மே 20 அன்று, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், ஜனாதிபதி ஜோ பைடன் ஜப்பானில் நடந்த கூட்டத்தின் உச்சிமாநாட்டில் இந்த முடிவை G7 உறுப்பு நாடுகளுக்கு தெரிவித்தார் என்று கூறினார்.
Getty Images
இந்த ஜெட் விமானங்களை எவ்வாறு இயக்குவது என்பது குறித்து உக்ரேனிய விமானிகளுக்கு அமெரிக்கப் படையினரால் பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
உக்ரைன் பெற்ற எந்த ஜெட் விமானங்களும் பாதுகாப்பு நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், ரஷ்ய பிரதேசத்தின் மீதான தாக்குதல்களை அமெரிக்கா செயல்படுத்தாது அல்லது ஆதரிக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
Military.com