வெறும் 20 நிமிடத்தில் முகத்தை பளபளக்க இந்த ஒரு Face Pack போதும்
பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.
ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில், முகத்தை வெறும் 20 நிமிடங்களில் முகத்தை பொலிவாக்க உதவும் Face Pack குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- எலுமிச்சை பழம்-1
- தக்காளி - 1
- அரிசி - 3 ஸ்பூன்
- தயிர் - 2 ஸ்பூன்
- மஞ்சள் - 3 ஸ்பூன்
- கடலை அல்லது அரிசி மாவு - சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் எலுமிச்சை, தக்காளி, அரிசி போன்றவற்றை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் இதை ஒரு வட்டிகட்டியில் வடித்து தண்ணியாக எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து அதனுடன் தயிர், மஞ்சள், கடலை அல்லது அரிசி மாவு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
இறுதியில் இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதியில் சிறிய ப்ரெஷ் கொண்டு அப்ளை செய்யவும்.
பின் இதை 20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும்.
இதனைத்தொடர்ந்து குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தைக் கழுவினால் போதும் முகம் பிரகாசமாக இருக்கும்.
இந்த Face Pack-ஐ வாரத்திற்கு ஒருமுறையாவது செய்வதற்கு முயற்சி செய்யவும்.
தொடர்ந்து இதனை பயன்படுத்தி வர முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி சருமத்தை மென்மையாக்க உதவுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |