தங்கம் போல் முகம் ஜொலிக்க இந்த ஒரே ஒரு Facepack போதும்: இப்படி Use பண்ணுங்க
பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.
ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில், வீட்டிலிருந்தபடியே சரும பிரச்சனைகள் நீங்கி, முகம் பளபளக்க இந்த ஒரே ஒரு Facepack போதும்.
இயற்கையான முறையில் முகத்தை பளபளக்க செய்யும் Facepack எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கடலை மா- 3 ஸ்பூன்
- தேன்- 1 ஸ்பூன்
- தயிர்- 1 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
ஒரு சின்ன பவுலில் கடலை மா, தேன், தயிர் சேர்த்து கலந்து பின் முகத்தில் தடவிக்கொள்ளவும்.
பின் இதை 15 நிமிடங்கள் உலர விட்டு பின் நீரினால் முகத்தை கழுவிக்கொள்ளலாம்.
கிடைக்கும் பயன்கள்
கடலை மா சருமத்தில் உள்ள கறைகளை நீக்க உதவுகிறது. மேலும், சரும தொற்றுகள் ஏற்படுவதை தடுக்கிறது.
கடலை மா முகத்தில் எண்ணெய்யை உறிஞ்சு விடுகிறது. முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்றவும் பயன்படுகிறது.
வயதான தோற்றத்தை தவிர்க்க தயிர் பெரியளவில் உதவுகிறது. மேலும், சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் சருமத்தை பாதுகாக்கிறது.
தேன் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது. தேனில் உள்ள ஆக்சிஜனேற்ற பண்புகள் முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் கோடுகளைத் தடுக்கிறது.
மேலும், தேனின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தில் உள்ள துளைகளை அகற்ற உதவுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |