ஜொலிக்கும் சருமம் வேண்டுமா? ரோஜா இதழ்களை இப்படி பயன்படுத்தி பாருங்க! விரைவில் பலன்
Skin Care
By Kishanthini
பொதுவாக ரோஜா இதழ்களை நாம் சருமத்திற்கு பயன்படுத்துவதினால் சருமத்திற்கு நாள் முழுவதும் பொலிவினை கொடுக்கும்.
இதழ்களில் இயற்கையாகவே பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் மற்றும் வைட்டமின் சி போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் சருமப் பிரச்சனைக்குத் தீர்வாக அமைவதோடு சரும சுருக்கங்களை எதிர்த்துப் போராடுகிறது.
இதனை ஒரு சில பொருட்களுடன் கலந்து பயன்படுத்தவது இன்னும் பல நன்மைகளை தரும்.
அந்தவகையில் தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
image -bebeautiful
சருமம் மென்மையாகவும், பொலிவுடனும் இருக்க
- ஒரு பவுலில் பன்னீர் ரோஜா இதழ்களை சுத்தமாக கழுவி, அதனை மிக்சி ஜாரில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மைபோல் அரைக்கவும்.
- பின்பு அந்த பேஸ்ட்டை சுத்தமான பவுலில், ஒரு ஸ்பூன் எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் காய்ச்சாத பசும் பால், சேர்த்து நன்றாக கலந்து, முகத்தில் அப்ளை செய்யுங்கள்.
- பின்பு 10 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருங்கள். பின்பு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்துவர நல்ல பலன் கிடைக்கும்
சூரிய கதிர்களால் ஏற்படும் சரும பாதிப்புகள் நீங்க
- ஒரு சுத்தமான பவுலில், ஒரு ஸ்பூன் அரைத்த ரோஸ் இதழ்களை எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து, இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்களுக்கு பின்பு சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
சருமத்தில் சுருக்கம் வராமல் இருக்க
- 3 ரோஜா இதழ்களை கால் கப் தயிருடன் கலந்து மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.
- அடுத்து அதனுடன் 1 ஸ்பூன் ஆலிவ் ஆயிலைக் கலந்து நன்கு 20 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து இதனுடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து பயன்படுத்தினால் ரோஜாப்பூ ஃபேஸ்பேக் தயார்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US