முகப்பொலிவை மூன்றே நாளில் அதிகரிக்க உதவும் Facepack: வீட்டிலேயே தயாரிக்கலாம்
பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.
ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில், வீட்டிலிருந்தபடியே முகப்பொலிவை அதிகரிக்க இந்த Facepack போதும்.
தேவையான பொருட்கள்
- ஆளி விதை- 1 ஸ்பூன்
- ஓட்ஸ்- 2 ஸ்பூன்
- தேன்- 1 ஸ்பூன்
- பால்- 3 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் ஆளி விதை மற்றும் ஓட்மீலை அவற்றை மிக்ஸியில் அரைத்து நன்றாக பொடி செய்து கொள்ளவும்.
அதன்பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த தூளை சேர்த்து அதனுடன் பால் சேர்த்து கலக்கவும்.
பிறகு முகத்தை நன்கு கழுவி உலர வைத்து அந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்தில் தடவவும்.
இதனை முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை உலர வைக்கவும்.
இறுதியாக அதை வெதுவெதுப்பான நீரில் கழுவி முகத்தை நன்கு உலர்த்தவும்.
இதனை தொடர்ந்து பயன்படுத்திவர சருமபிரச்னைகள் நீங்கி முகம் பொலிவுபெறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |