முகம் வீங்கி வியர்த்து கைகளை வளைத்துக்கொண்டு... எப்படி இருந்த புடின் இப்படி ஆகிவிட்டார்!
சட்டையில்லாமல் குதிரை சவாரி, பயமில்லாமல் புலிகளை சோதிப்பது, ஜூடோ பயிற்சி என வகை வகையாக புடினுடைய புகைப்படங்கள் வெளியாகும்.
அதெல்லாம் அப்போது...
இப்போது, வியர்க்க விறுவிறுக்க, கைகள் நடுங்க, முகம் வீங்கிப்போய் உட்கார்ந்திருக்கும் புடினுடைய படங்கள்தான் வெளியாகின்றன!
வல்லரசு ஒன்றின் வலிமையான தலைவனாக, உலகின் வலிமையான நபர்களில் ஒருவராக தன்னைக் காட்டிக்கொள்ளும் புடின், இப்போதெல்லாம் ஒரு நோயாளி போல் காணப்படும் புகைப்படங்கள்தான் அதிகம் வெளியாகின்றன.
செயின்ட் பீற்றர்ஸ்பர்கில் நடைபெற்று வரும் பொருளாதார உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட புடின், நீண்ட உரையாற்றியதுடன் விவாதங்களிலும் பங்கேற்றார்.
ஆனால், ஓரிடத்தில் நிலையாக உட்காராமல், அசைந்து அசைந்து உட்கார்ந்துகொண்டு, கால்களை வளைத்துக்கொண்டு, கைகளை முறுக்கிக்கொண்டு, வியர்த்துப்போய் உட்கார்ந்திருந்த புடினைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
ஒரு பக்கம், இந்த அக்டோபர் வந்தால் புடினுக்கு 70 வயதாகிறது உண்மைதான் என்றாலும், மறுபக்கம், அவருக்கு புற்றுநோய் மற்றும் பார்க்கின்ஸன் பிரச்சினை என கூறப்படுவதால், இந்த உடல் மாற்றங்களுக்கு காரணம் வயதா அல்லது நோயா என்பது தெரியவில்லை.
ஆனால், சமீபத்தில் அவர் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு எழும்போது தலைசுற்றலால் பாதிக்கப்பட்டதால், அவரது மருத்துவர்கள், நீண்ட நேர நிகழ்ச்சிகளில் பங்கேற்கவேண்டாம் என அவருக்கு ஆலோசனை அளித்திருந்தார்கள்.
ஆனாலும், அவர் செயின்ட் பீற்றர்ஸ்பர்கில் நடைபெற்று வரும் பொருளாதார உச்சி மாநாட்டில் பங்குகொண்டபோது நீண்ட நேரம் மேடையில் தோன்றி, பல மணி நேரம் பேசியது குறிப்பிடத்தக்கது.