ஒரே இரவில் முகம் பளபளக்க உதவும் Facepack: தூங்குவதற்கு முன் பயன்படுத்துங்கள்
பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.
ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில், ஒரே இரவில் முகம் பளபளக்க உதவும் Face Pack குறித்து பார்க்கலாம். இதனை இரவு தூங்குவதற்கு முன் பயன்படுத்தினால் போதும்.
கற்றாழை மற்றும் தேன்
கற்றாழை சருமத்திற்கு பல நன்மைகளை செய்கிறது. கற்றாழையில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் முகப்பரு, சரும எரிச்சல் மற்றும் சரும வறட்சி போன்றவற்றை போக்க உதவும்.
இதற்க்கு, முதலில் இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்தக் கொள்ளவும், பின்னர் அதில் ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி மற்றும் இரண்டு ஸ்பூன் தேன் ஒன்றாக சேர்த்து கலக்கவும்.
இந்த பொருட்களையும் ஒன்றாக கலந்த பின்னர் முகத்தில் தடவவும், சுமார் 15 - 20 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவவும்.
பாலாடை மற்றும் குங்குமப்பூ
இந்த பேஸ்பேக் தயாரிக்க முதலில், ஒரு ஸ்பூன் குங்குமப்பூ மற்றும் ஒரு ஸ்பூன் பாலாடை இரண்டை ஒன்றாக ஒரு கிண்ணத்தில் சேர்த்து கலக்கவும்.
இந்த பேஸ்பேக் இரவு தூங்குவதற்கு முன் பயன்படுத்தினால் முகத்தில் இருக்கும் டேனிங் நீங்கி சருமம் பொலிவு பெரும்.
மஞ்சள் மற்றும் பால்
இந்த பேஸ்பேக் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும். மேலும் முகத்தில் துளைகள் ஏற்படுவதை தடுத்து முகப்பருக்கள் ஏற்படாமல் பாதுகாக்கும்.
இதனை தயாரிக்க ¼ ஸ்பூன் மஞ்சளை, 4 ஸ்பூன் பாலுடன் நன்றாக கலந்துக் கொள்ளவும்.
இந்தக் கலவையை முகத்தில் தடவி ¼ மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
தக்காளி மற்றும் தயிர்
தயிரில் உள்ள பண்புகள் சருமத்தை இரவோடு இரவாக பளபளப்பாக மாற்ற உதவும்.
இந்த பேஸ்பேக் தயாரிக்க ஒரு ஸ்பூன் தயிரில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தக்காளி சாற்றை சேர்க்கவும்.
இந்த பேஸ்பேக்கை முகத்தில் 10 - 15 நிமிடங்கள் தடவி பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |