வயதானாலும் என்றும் இளமையாக இருக்க இந்த 2 பொருட்கள் போதும்: எப்படி பயன்படுத்துவது?
முகத்தில் சுருக்கம் விழுவது இயல்பான ஒன்று. சுருக்கம் விழாமல் இருக்க தங்களது வாழ்வியல் முறைகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
சுருக்கும் விழுவதற்கு அதிகமாக வெயிலில் சுற்றுவது, சருமத்தை ஒழுங்காக பராமரிப்பது பாேன்ற பல காரணங்கள் உள்ளது.
அந்தவகையில், முகத்தில் சுருக்கம் விழாமல் இளமையாக இருக்க இந்த 2 பொருட்கள் போதும்.

தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு- 2
- தேன்- 2 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கை அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அதில் தேன் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவவும்.
முகத்தில் தடவி இந்த 20 நிமிடங்கள் விட்டுவிட்டு பின் தண்ணீரை கொண்டு முகத்தை கழுவவும்.

இதனை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் சருமத்தை நீண்ட காலத்திற்கு இளமையாக வைத்திருக்கலாம்.
உருளைக்கிழங்கு தழும்புகள் மற்றும் புள்ளிகளை குறைக்க உதவுகிறது. மேலும், துளைகளை சுத்தம் செய்வதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தேன் முகத்தில் உள்ள துளைகளை சுத்தம் செய்யவும், முக தோலை மென்மையாக்கவும், சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        