இளமையிலே முக சுருக்கமா? இதனை போக்க இதோ சூப்பரான சில வழிமுறைகள்
பொதுவாக முகச்சுருக்கம் என்பதும் சிலருக்கு இளம் வயதிலும், சிலருக்கு வயதான பிறகும் முகத்தில் சுருக்கம் தோன்ற ஆரம்பிக்கும்.
இவற்றில் இளம் வயதில் சுருக்கம் வருவது என்பது ஒருவரது வாழ்வில் நிறைய பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.
முதல் சுருக்கம் என்பது, கண்களின் ஓரங்களில் ஏற்படக்கூடியது. இரண்டாவது, முகத்தில் தோன்றகூடியது.
முடிந்தவரை இதனை எளியமுறையில் போக்குவதே சிறந்தது. தற்போது அவற்றை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
Photo Credit: Getty Images
- இளமையிலேயே முதுமைத் தோற்றத்துடன் இருப்பவர்கள், தினமும் ஒரு கைப்பிடி அளவு ஸ்ட்ராபெரி அல்லது 3 நெல்லிக்காய்களைச் சாப்பிட வேண்டும்.
- தக்காளி பழச்சாறு, நன்றாகப் பழுத்த வாழைப்பழம் ஆகியவற்றை முகத்தில் தடவி வந்தால் முக சுருக்கம் மறையும்.
- தரமான சந்தனப்பவுடருடன் கிளிசரின் சேர்த்து, பேஸ்ட் போன்று நன்கு குழைத்து, அதை முகத்தில் நன்கு பூசி, சிறிது நேரத்திற்குப் பின் கழுவிவிட வேண்டும். இதை வாரம் ஒருமுறை செய்து வர, முக சுருக்கம் நீங்கும்.
- கரட் சாறுடன் சிறிதளவு கடலை மாவு கலந்து, பேஸ்ட் போல செய்து அதை முகத்தில் பூசி சிறிது நேரத்திற்குப் பின் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், நாளடைவில் முக சுருக்கம் நீங்கும்.
- வறண்ட சருமம் உடையவர்கள் வெறும் கரட் சாற்றினை மட்டும் முகத்தில் தேய்த்துவர, முக சுருக்கம் மறையும்.
- சாத்துக்குடிச்சாறு ஒரு தேக்கரண்டி, தேன் ஒரு தேக்கரண்டி கலந்து முகத்தில் பூசி, 30 நிமிடம் வைத்திருந்து பின் முகத்தைக் கழுவவும். இதுபோன்று 10 நாள்கள் செய்து வந்தால், முக சுருக்கம் மறையும். தயிருடன் கடலை மாவைக் கலந்து , பேஸ்ட்டாக்கி முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், முக சுருக்கம் மறையும்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.