Fact Check: உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி மற்றும் அவர் மனைவி குறித்து வெளியான வீடியோ
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியும் அவர் மனைவி ஒலினா ஜெலன்ஸ்காவும் இணைந்து பாட்டு பாடுவது போன்ற வீடியோ வைரலான நிலையில் அதன் உண்மை தன்மை குறித்து தெரியவந்துள்ளது.
உக்ரைனில் ரஷ்ய படையினர் தொடர்ந்து போர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி மற்றும் அவர் மனைவி ஒலினா ஆகிய இருவரும் இணைந்து கிட்டார் இசைகருவியை வாசித்தப்படி பாட்டு பாடுகிறார்கள் என ஒரு வீடியோவை சங்கரா நாயர் என்பவர் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார்.
அந்த பதிவில், உக்ரேனிய ஜனாதிபதி ஜெலன்ஸ்கியும் மனைவியும் தங்கள் இளமை மற்றும் மகிழ்ச்சியான நாட்களில். ம்ம்ம்.. ஆனால் சில தருணத்தில் உங்கள் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும்.
உண்மையில், வாழ்க்கை ஒரு புரிந்துகொள்ள முடியாத முரண்பாடு. இது நம்மில் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். பிரார்த்தனை செய்வோம் என பதிவிட்டிருந்தார்.
இந்த வீடியோ வைரலான நிலையில் அதில் இருப்பது ஜெலன்ஸ்கியும் அவர் மனைவி ஒலினாவும் கிடையாது என்பது உறுதியாகியுள்ளது. அதன்படி அந்த வீடியோவில் பாடும் இருவரும் அமெரிக்காவின் ப்ளோரிடாவை சேர்ந்த இசைக்குழுவை சேர்ந்த பிரபலமான பாடகர்கள் ஆவார்கள்.
முடிவு: எனவே, வீடியோவில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் அவரது மனைவி, உக்ரைனின் முதல் பெண்மணி ஓலினா ஜெலன்ஸ்கா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்ற கூற்று உண்மையல்ல.