52 பந்தில் 113 ரன் விளாசிய பாப் டூ பிளெஸ்ஸிஸ்! 18.3 ஓவரிலே 221 ஓட்டங்களை எட்டி வெற்றி
பாப் டூ பிளெஸ்ஸிசின் சதத்தின் உதவியுடன் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சியாட்டில் ஓர்கஸை வீழ்த்தியது.
டிம் செய்பர்ட் சதம்
சியாட்டில் ஓர்கஸ் மற்றும் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான மேஜர் லீக் கிரிக்கெட் போட்டி டல்லஸில் நடந்தது.

முதலில் ஆடிய சியாட்டில் ஓர்கஸ் அணியில் டிம் செய்பேர்ட் (Tim Seifert) 66 பந்துகளில் 104 ஓட்டங்களும் (6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள்), ஷயான் ஜஹாங்கீர் 47 பந்துகளில் 78 ஓட்டங்களும் விளாசினார்.
இதன்மூலம் அந்த அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 220 ஓட்டங்கள் குவித்தது. மில்னே, அம்ஷி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியில் பாப் டூ பிளெஸ்ஸிஸ் அதிரடி சதம் விளாசினார்.

பாப் டூ பிளெஸ்ஸிஸ் ருத்ரதாண்டவம்
ரோஸ்சௌவ் 21 பந்துகளில் 49 ஓட்டங்களும், வியான் முல்டர் 15 பந்துகளில் 31 ஓட்டங்களும் (ஆட்டமிழக்காமல்) விளாசினர்.
அணித்தலைவர் பாப் டூ பிளெஸ்ஸிஸ் (Faf du Plessis) ஆட்டமிழக்காமல் 52 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 113 ஓட்டங்கள் குவித்தார்.
அவரது ருத்ரதாண்டவத்தில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 18.3 ஓவர்களிலேயே 221 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |