ரொனால்டோ, மெஸ்ஸி இல்லை: உலகின் பணக்கார கால்பந்து வீரர் இவர் தான்
2024யில் உலகின் முதல் 5 பணக்கார கால்பந்து வீரர்கள் குறித்து இங்கு காண்போம்.
கால்பந்து உலகில் தற்போது அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) மற்றும் போர்த்துக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Christiano Ronaldo) இருவரும் ஜாம்பவானாக இருக்கிறார்கள்.
எனினும் பணக்கார கால்பந்து வீரர்கள் பட்டியலில் புருனே வீரர் ஃபைக் போல்கியா முதலிடம் பிடித்துள்ளார்.
ஃபைக் போல்கியா (Faiq Bolkiah)
புருனே அரச குடும்பத்தைச் சேர்ந்த இவர், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தார். 2013ஆம் ஆண்டில் புருனேயின் U19 அணிக்காக களமிறங்கிய ஃபைக் போல்கியா, 2016ஆம் ஆண்டில் தேசிய அணிக்காக களமிறங்கினார்.
தற்போது தாய்லாந்தின் கிளப் அணியான Ratchaburi-க்காக விளையாடி வரும் ஃபைக் போல்கியாவின் நிகர் மதிப்பு 20 பில்லியன் டொலர்கள் ஆகும். இதன்மூலம் ஃபைக் போல்கியா இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
லியோனல் மெஸ்ஸி (Lionel Messi)
அர்ஜென்டினா ஜாம்பவான் மெஸ்ஸியின் நிகர மதிப்பு 600 மில்லியன் டொலர்கள் ஆகும். கடந்த ஆண்டு பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணியில் இருந்து இன்டர் மியாமி அணிக்கு மாறிய மெஸ்ஸி, 18 போட்டிகளில் 13 கோல்கள் அடித்துள்ளார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo)
அல் நஸர் அணிக்காக விளையாடி வரும் போர்த்துக்கல் ஜாம்பவான் ரொனால்டோவின் நிகர மதிப்பு 500 மில்லியன் டொலர்கள் ஆகும்.
தனது தேசிய அணி மற்றும் கிளப்களுக்காக ரொனால்டோ மொத்தம் 895 கோல்கள் அடித்துள்ளார்.
டேவிட் பெக்காம் (David Beckham)
இங்கிலாந்து அணிக்காக விளையாடிய முன்னாள் வீரரான டேவிட் பெக்காமின் நிகர மதிப்பு 450 மில்லியன் டொலர்கள் ஆகும்.
இவர் Adidas, The Tudor watch பிராண்ட் மற்றும் சொந்த விஸ்கி பிராண்ட், Haig club ஆகியவற்றின் மூலம் வருமானம் பார்த்து வருகிறார்.
டேவ் வீலன் (Dave Whelan)
இங்கிலாந்து அணிக்காக விளையாடிய பழம்பெரும் கால்பந்து வீரர் டேவ் வீலன். 87 வயதாகும் இவரின் நிகர மதிப்பு 210 மில்லியன் டொலர்கள் ஆகும்.
வெற்றிகரமான தொழிலதிபரான டேவ், Wigan Athletic கால்பந்து கிளப்பை நிறுவினார். இங்கிலாந்து அணிக்காக 193 போட்டிகளில் இவர் விளையாடியுள்ளார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |