போலியான ஷாம்பெயின்களை வெளிநாடுகளில் விற்ற பிரான்ஸ் நாட்டவர்: நீதிமன்றம் விதித்த கடும் தண்டனை
பிரான்ஸ் நாட்டில் போலியான ஒயின்களை தயாரித்து விற்பனை செய்த உரிமையாளருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
போலி ஷாம்பெயின்கள்
பிரான்ஸ் நாட்டின் ஒயின் தயாரிப்பாளர் டிடியர் சோபின் என்பவர் போலியான ஷாம்பெயின்களை தயாரித்து விற்பனை செய்த குற்றத்திற்காக 18 மாதங்கள் சிறை தண்டனை பெற்றுள்ளார்.
இவர், ஒயின்களில் கார்பனேற்றம் செய்து ஷாம்பெயின் நறுமணத்தை செயற்கையாக சேர்த்து ஆயிரக்கணக்கான போலி ஷாம்பெயின்களை ஸ்பெயின் மற்றும் தெற்கு பிரான்ஸ் ஆகிய பகுதிகளில் விற்பனை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரான்சின் ரீம்ஸ் பிராந்திய நீதிமன்றம் டிடியர் சோபினுக்கு இந்த தண்டனையை வழங்கியுள்ளது.
அத்துடன் டிடியர் சோபின் இனி ஒயின்களை தயாரிக்கவும், 5 ஆண்டுகளுக்கு ஷாம்பெயின் துறையில் வேலை செய்யவும் தடை விதித்துள்ளது.
மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அவரது மனைவிக்கு 2 ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அபராதம்
ஒயின் தயாரிப்பாளர் டிடியர் சோபின் மற்றும் அவரது மனைவியின் நிறுவனமான SAS சோபினுக்கு பல குற்றச்சாட்டுகளின் கீழ் €500,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |