நிர்வாண பூஜை நடத்தி இளம்பெண்ணை பலமுறை சீரழித்த சாமியார்! உடந்தையாக இருந்த கணவன்... அம்பலமான அதிர்ச்சி சம்பவம்
இந்தியாவில் நிர்வாண பூஜை நடத்தி பெண்ணை பலமுறை பலாத்காரம் செய்த போலி சாமியார் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த சம்பவத்திற்கு அந்த பெண்ணின் கணவரும் உடந்தையாக இருந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாசிக்கில் தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. அதன்படி சாமியாரின் உதவியாளர்கள் இருவரும் பாதிக்கப்ப்ட்ட பெண்ணின் கணவருக்கு முதலில் அறிமுகமாகி உள்ளார்.
இதையடுத்து அதிக பணம் சம்பாதிக்க வேண்டுமானால் சாமியார் சொல்லும் பரிகாரங்களை செய்தால் உங்கள் வீட்டில் செல்வம் செழிக்கும் என்று ஆசைவார்த்தை கூறி உள்ளனர். சாமியாரின் பூஜை நடத்தும் போது பாதிக்கப்பட்ட பெண் ஆடைகளை கழைந்து நிர்வணமாக அமர வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளனர்.
பணத்துக்கு ஆசைப்பட்ட அப்பெண்ணின் கணவரும் இதற்கு ஒப்பு கொண்டது தான் மிகப்பெரிய கொடுமை.
பின்னர் பாதிக்கப்பட்ட பெண் பல முறை சாமியாரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். மேலும் கடந்த 7 மாதங்களாக அவர் பல சித்ரவதைகளை அனுபவித்து உள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனை தொடர்ந்து போலி சாமியார் மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மேலும் சாமியாரால் வேறு பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா எனவும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.