பிரித்தானியாவில் பறிமுதல் செய்யப்படும் Labubu பொம்மைகள் - என்ன காரணம்?
பிரித்தானியாவில் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் போலி Labubu பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் பிரபலமான PopMart நிறுவனத்தின் Labubu பொம்மைகள் மீது ஏற்பட்ட தீவிர ஆர்வம், குழந்தைகளின் பாதுகாப்பை கேவிக்குள்ளாக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.
ஹொங்ஹொங் கலைஞர் Kasing Lung வடிவமைத்த Labubu என்பது சிறிய யானை போன்ற உருவம் கொண்ட பொம்மையாகும்.
இந்த பொம்மைகள் Blind box எனப்படும் மூடியுள்ள பெட்டிகளில் விற்பனை செய்யப்படுவதால், எந்த வடிவம் கிடைக்கும் என்பது தெரியாததால், இதற்கு மிகப் பாரிய சந்தை உருவாகியுள்ளது.
இந்த தேவை அதிகரித்ததன் விளைவாக, Lafufus எனப்படும் போலி Labubu பொம்மைகள் பிரித்தானியாவின் பல கடைகளிலும், ஓன்லைன் சந்தைகளிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
Trading Standards அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் ஆயிரக்கணக்கான போலி பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவை CE அல்லது UKCA பாதுகாப்பு முத்திரைகள் இல்லாமல், குழந்தைகளுக்கு ஆபத்தான தன்மைகள் கொண்டதாகவும் சில பொம்மைகள் நச்சுத்தன்மையுள்ள வண்ணங்கள், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் சிசு வளர்ச்சிக்கு ஆபத்தான உலோகங்களைக் கொண்டிருக்கலாம் என BBC செய்தி வெளியிட்டுள்ளது.
Pop Mart நிறுவனம், 2023-ல் UK விற்பனையை தற்காலிகமாக நிறுத்தியது. ஆனால், பற்றாக்குறை காரணமாக போலி பொருட்கள் சந்தையில் அதிகரித்துள்ளன.
உண்மையான Labubu பொம்மைகள் Holographic Sticker, QR Code, UV முத்திரைகள் கொண்டிருப்பதால், பெற்றோர்கள் மற்றும் சேகரிப்பாளர்கள் அவற்றை சரிபார்த்து வாங்க வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Fake Labubu dolls UK, Labubu toy safety warning, Pop Mart counterfeit dolls, Child safety toy recall, Trading Standards UK dolls, CE mark toy regulations, Toxic toys UK alert, Lafufu fake dolls danger, Labubu doll authenticity check, UK toy safety crackdown