இந்திய மாணவர்களுக்கு சிறப்பு பயண உதவித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள British Airways
British Airways நிறுவனம், பிரித்தானியா செல்லும் இந்திய மாணவர்களுக்கு சிறப்பு பயண உதவித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சேவை 2025 அக்டோபர் மாத இறுதி வரை வழங்கப்படும்.
மாணவர்கள் தங்கள் கல்வி பயணத்தை ஆரம்பிக்கும்போது, விமான நிலையங்களில் ஏற்படும் சிக்கல்களை குறைக்கும் நோக்கில் இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளது.
டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய இந்திய நகரங்களில் இருந்து, லண்டன் ஹீத்ரோவிற்கு பயணிக்கும் மாணவர்களுக்கு இந்த சேவை வழங்கப்படுகிறது.
இந்த நகரங்களில் வாரத்திக்கிறு 56 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இந்த சேவையின் சிறப்பம்சங்கள்:
- விமான நிலையங்களில் இதற்காக பிரத்யேகமான Check-In மேசை
- விமான நிலையங்களில் வழிகாட்டுதல்
- ஹீத்ரோ விமான நிலையத்தில் Terminal-5-ல் இறங்கியதும் மாற்றங்கள் குறித்து உதவி
முதல்முறை வெளிநாடு பயணம் சேயும் மாணவர்களுக்கு உற்சாகம் மற்றும் நம்பிக்கை அளிக்கும் வகையில் சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்திய மாணவர்கள் கல்விக்காக வெளிநாடுகளுக்கு பயணிப்பது அதிகரித்துள்ள நிலையில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
British Airways ஏற்கெனவே Meet and Assist என்ற சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்திய பயணிகளுக்கு குறிப்பாக இந்திய மொழிகளில் உதவிகளை வழங்குகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |