120 கிலோவிற்கு மேல் எடை கொண்ட நபரை திருமணம் செய்த இளம் பெண்! கொடுத்த பதிலடி
அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர், சுமார் 120 கிலோவிற்கு மேல் எடை கொண்ட நபரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வரும் நிலையில், அவரை ட்ரோல் செய்த இணையவாசிகளுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் Sienna Keera. 26 வயது மதிக்கத்தக்க இவருக்கு, கடந்த 2018-ஆம் ஆண்டு சமூகவலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் மூலம் நடிகர் George Keywood(27) அறிமுகமாகியுள்ளார்.
அதன் பின் இருவரும் காதலித்து வந்த நிலையில், காதலனுக்காக Sienna Keera அவுஸ்திரேலியாவில் இருந்து பிரித்தானியாவிற்கு வந்தார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த தம்பதிக்கு Oliver என்ற ஒரு வயதில் மகன் உள்ளார். இந்நிலையில், இவர்கள் ஒன்றாக சேர்ந்து பல வீடியோக்களை டிக் டாக் பக்கத்தில் பதிவிட்டு வந்துள்ளனர்.
ஆனால், இதைக் கண்ட இணையவாசிகள் சிலர் இது உண்மையான காதல் இல்லை, போலி திருமணம், எல்லாம் நடிப்பு, உங்களுக்கும் அவருக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. இது நீடிக்காது என்று தொடர்ந்து குறிப்பிட்டு வந்துள்ளனர்.
தற்போது இவர்களுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் Sienna Keera பிரபல ஊடகமான 7Life-க்கு அளித்துள்ள பேட்டியில், தங்கள் உறவை விட்டு விடுங்கள். நீங்கள் இப்படி சொல்வதன் மூலம் எதுவும் மாற போவதில்லை, நாங்கள் ஒருவருக்கொருவர் நேசிக்கிறோம்.
எங்கள் நோக்கமே நீங்களே எங்களை ஏற்றுக் கொள்வது தான். எங்களுக்கு ஆதரவாக ஏராளமானோர் குறுஞ்செய்தி அனுப்புகின்றனர். அவர்களுக்கு எல்லாம் நன்றி சொல்லிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
George Keywood அவர்கள், People Just Do Northing என்ற படத்தில் Craig கதாபாத்திரத்திற்காக, அவருக்கு BAFTA மற்றும் RTS விருதுகள் கொடுக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி அவர் Carnage மற்றும் Killed By My Debt(2018) ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இவரின் எடையாக சரியாக வெளியிடப்படவில்லை என்றாலும், எப்படியும் சுமார் 120 கிலோவிற்கு மேல் தான் இருப்பார் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் மதிப்பிட்டு குறிப்பிட்டுள்ளன.