43 வயதில் கர்ப்பம்.. பணத்திற்கு ஆசைப்பட்டு இளம்பெண் போட்ட நாடகம்! கையும் களவுமாக சிக்கிய சம்பவம்
அமெரிக்காவில் பெண் ஒருவர் பணத்திற்கு ஆசைப்பட்டு கர்ப்பமாக இருப்பதாக போலியாக நடித்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அமெரிக்காவின் Georgia பகுதியில் வசித்து வருபவர் Robin Folsom. 43 வயதை கடந்த இவர் கர்ப்பமாக இருப்பதாக கூறி நடனமாடியது அம்பலமாகியுள்ளது. அமெரிக்காவில் பணியாற்றும் பெண்களுக்கு பிரசவ கால விடுமுறைகளை வழங்க அரசு அறிவித்துள்ளது.
அதன்படி ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் பெண் கர்ப்பமாக இருந்தால் அவருக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறையை வழங்க வேண்டும். இதனை சாகசமாக பயன்படுத்தி கொண்ட Robin Folsom கடந்த 2020ஆம் ஆண்டு தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி தனக்கு பிரசவ கால விடுமுறை வேண்டும் என்றும் தனது நிறுவனத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இதையடுத்து அவருக்கு 1 வருட சம்பளமாக 1 லட்ச அமெரிக்க டொலரும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறை முடிந்து கர்ப்பமான வயிற்றுடன் அலுவலகத்திற்கு வந்துள்ளார். ஆனால் அங்கிருந்த பணியாளர்களுக்கு அவரின் கர்ப்பமான தோற்றத்தில் சந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து சில நாட்களில் தனது குழந்தை பிறந்துள்ளதாக கூறி குழந்தையின் புகைப்படங்களை மற்றவர்களுக்கு அனுப்பியுள்ளார். அவர் அனுப்பிய ஒவ்வொரு புகைப்படத்திலும் குழந்தை முகம், நிறம் போன்றவை ஒரே மாதிரி இல்லை.
இந்நிலையில் அவர் மீது அந்நிறுவனம் விசாரணை நடத்தியதை அடுத்து அவர் போலியாக நடித்தது அம்பலமானது. இதையடுத்து அவர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது.