வெறும் ரூ.250 -க்கு போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரிப்பு! இளைஞர் கைதானது எப்படி?
250 ரூபாய்க்கு போலியான வாக்காளர் அடையாள அட்டை தயாரித்து கொடுத்து வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இளைஞர் கைது
தமிழக மாவட்டமான பெரம்பலூர், லப்பைக்குடிக்காடு அபுபக்கர் தெரு பேரூரை சேர்ந்தவர் முகமது சமீம் (33). இவர் ஜெராக்ஸ் கடை மற்றும் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார்.
இவரது கடைக்கு தெற்கு தெருவை சேர்ந்த அபுதாஹிர் மகன் சாஜித் என்பவர் வந்துள்ளார். இவர், பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்காக வாக்காளர் அடையாள அட்டை பதிவு செய்துள்ளார்.
ஆனால், 3 மாதங்கள் ஆகியும் அடையாள அட்டை வரவில்லை. இதனால், சாஜித்திடம் இருந்து 250 ரூபாயை பெற்றுக்கொண்ட முகமது சமீம் போலியான வாக்காளர் அடையாள அட்டை தயாரித்து கொடுத்துள்ளார்.
பின்னர், அதை வைத்து பாஸ்போர்ட் விண்ணப்பிக்க சாஜித் சென்றுள்ளார். அங்கு, ஆவணங்கள் சரிபார்ப்பின் போது போலி வாக்காளர் அடையாள அட்டை என்பது தெரியவந்தது.
பின்பு, வேறு ஏதேனும் ஆவணங்கள் உள்ளதா என்று கேட்டுள்ளனர். அப்போது, தபாலில் வந்த வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்துள்ளார்.
பின்னர், போலி வாக்காளர் அடையாள அட்டை தொடர்பாக மங்களமேடு பொலிஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
அதன்படி, முகமது சமீம் கடையில் பொலிஸார் ஆய்வு செய்தனர். அப்போது, ஏராளமான போலி வாக்காளர் அட்டை தயாரித்து கொடுத்தது தெரியவந்தது. இதனை கைப்பற்றிய போலீசார் முகமதுசமீமை கைது செய்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |