பாகிஸ்தான் பிரீமியர் லீக்கின் முதல் போட்டியிலேயே..ஷாஹீன் அப்ரிடி அணி சரவெடி ஆட்டம்
பாகிஸ்தான் பிரீமியர் லீக் 2026 தொடரின் முதல் போட்டியில் லாகூர் கிளாண்டர்ஸ் அணி 199 ஓட்டங்கள் குவித்தது.
84 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப்
லாகூரின் கடாஃபி மைதானத்தில் PSL எனும் பாகிஸ்தான் பிரீமியர் லீக் 2026 தொடர் தொடங்கியுள்ளது.
ஷாஹீன் ஷா அப்ரிடியின் லாகூர் கிளாண்டர்ஸ் அணியும், மார்னஸ் லபுஸாக்னேயின் ஹைதராபாத் கிங்ஸ்மென் அணியும் முதல் போட்டியில் விளையாடி வருகின்றன.
நாணய சுழற்சியில் வென்ற லாகூர் அணி துடுப்பாட்டத்தை தொடங்கியது. முதல் விக்கெட்டுக்கு 50 பந்துகளில் 84 ஓட்டங்கள் குவித்தது. மொஹம்மது நயீம் 19 பந்துகளில் 30 ஓட்டங்கள் (1 சிக்ஸர், 4 பவுண்டரிகள்) விளாசி ஆட்டமிழந்தார்.
ஃபஹ்கர் ஜமான் அரைசதம்
அடுத்து வந்த ஷாஃபிக் 4 ஓட்டங்களில் வெளியேற, மறுமுனையில் ஃபஹ்கர் ஜமான் (Fakhar Zaman) அரைசதம் விளாசி ஆட்டமிழந்தார். அவர் 39 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 53 ஓட்டங்கள் குவித்தார்.
பின்னர் பர்வேஸ் சொதப்பிய நிலையில், சிக்கந்தர் ரஸா (24), ஹஸீபுல்லா கானின் அதிரடியில் லாகூர் அணி 199 ஓட்டங்கள் குவித்தது.
ஹைதராபாத் அணியின் தரப்பில் மெரிடித், ஹஸன் கான் தலா 2 விக்கெட்டுகளும், மொஹம்மது அலி ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |