பிரச்சினைகள் வெடிக்கும்... உலக நாடுகளுக்கு தாலிபான் விடுத்துள்ள எச்சரிக்கை!
ஆப்கானிஸ்தானில் தங்கள் அரசாங்கத்தை அங்கீகரிக்குமாறு அமெரிக்கா மற்றும் உலக நாடுகளுக்கு தாலிபான் அழைப்பு விடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு வெளிநாடுகளில் உள்ள பில்லியன் கணக்கான டொலர்கள் மற்றும் சொத்துகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், தலிபான் அரசாங்கத்தை எந்த நாடும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை.
இந்நிலையில் தாலிபான் செய்தித் தொடர்பாளர் Zabihullah Mujahid கூறியதாவது, அமெரிக்காவுக்கு நாங்கள் தெரிவிப்பது என்னவென்றால், அங்கீகரிக்கப்படாத நிலை நீடித்து, ஆப்கானிஸ்தான் பிரச்சனைகள் தொடர்ந்தால், அது எங்கள் பிராந்தியத்திற்கு மட்டுமின்றி உலகிற்கு ஒரு பிரச்சனையாக மாறும் என்று எச்சரித்துள்ளார்.
தலிபான்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடந்த முறை போரில் ஈடுபட்டதற்கான காரணம் இரு நாடுகளுக்கும் இடையே முறையான இராஜதந்திர உறவுகள் இல்லாததே.
தலிபான்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் ஏற்படுத்திய பிரச்சினைகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டிருக்கலாம், அரசியல் சமரசத்தின் மூலமும் தீர்க்கப்பட்டிருக்கலாம்.
அங்கீகாரம் என்பது ஆப்கானிஸ்தான் மக்களின் உரிமை என Zabihullah Mujahid கூறினார்.