மரண தண்டனையை எதிர்கொள்ளும் இரு இளைஞர்கள்: இளவரசர் வில்லியமிடம் கெஞ்சும் குடும்பம்

Saudi Arabia Prince William
By Arbin Feb 07, 2026 04:14 AM GMT
Report

சவுதி அரேபியாவில் போராட்டங்களில் கலந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு இளைஞர்களின் குடும்பங்கள், வேல்ஸ் இளவரசரின் வருகையின் போது தங்கள் கோரிக்கைகளை அரசாங்கத்திடம் எழுப்புமாறு கெஞ்சிக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

திருப்புமுனை

இராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், பிரித்தானிய அரசாங்கத்தின் சார்பில் பட்டத்து இளவரசர் வில்லியம் திங்கட்கிழமை அன்று மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக சவுதி அரேபியாவிற்கு வருகை தருகிறார்.

மரண தண்டனையை எதிர்கொள்ளும் இரு இளைஞர்கள்: இளவரசர் வில்லியமிடம் கெஞ்சும் குடும்பம் | Families Saudi Protesters Beg William

சவுதி அரேபியா ஒரு முழுமையான முடியாட்சி, அரசியல் மற்றும் சிவில் சுதந்திரங்கள் மீதான கடுமையான கட்டுப்பாடுகளுக்குப் பெயர் பெற்ற நாடு. பல தசாப்தங்களாக மனித உரிமை மீறல்கள் குறித்த ஏராளமான புகார்களுக்கு அந்த நாடு ஆளாகியுள்ளது.

இந்த நிலையில், யூசெஃப் அல்-மனாசிஃப் மற்றும் ஜவாத் குரைரிஸ் ஆகியோரின் வழக்குகள் சமீபத்திய ஆண்டுகளில் சர்வதேச ஊடகங்களால் தொடர்ச்சியாக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இத்தகைய ஒரு அரச குடும்பத்து வாரிசின் வருகை தங்களுக்குத் தேவையான திருப்புமுனையை வழங்கும் என்று அவர்களின் குடும்பங்கள் தற்போது நம்புகின்றன.

யூசெஃப் தனது 15 முதல் 17 வயதுக்குட்பட்ட காலத்தில் போராட்டங்களில் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. ஜவாத் 13 வயதில் ஒரு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

உடனடியாக வெளியேறுக... ஈரானில் அமெரிக்கர்களுக்கு ட்ரம்ப் நிர்வாகம் அவசர எச்சரிக்கை

உடனடியாக வெளியேறுக... ஈரானில் அமெரிக்கர்களுக்கு ட்ரம்ப் நிர்வாகம் அவசர எச்சரிக்கை

இந்த நிலையில், சவுதி அரேபிய உச்ச நீதிமன்றம் அவர்களின் மரண தண்டனைகளை உறுதிப்படுத்தினால், இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படும் உடனடி ஆபத்து உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு, சவுதி அரேபியாவில் சிறார் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை மீண்டும் பகிரங்கமாகத் தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்டது. 18 வயதுக்குட்பட்டவர்களாக இருந்தபோது போராட்டங்கள் தொடர்பான குற்றங்களைச் செய்த இரண்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

யூசெஃப் மற்றும் ஜவாத் இருவரும் சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஷியா முஸ்லிம்கள் என்று கூறப்படுகிறது. சன்னி சவுதி அரச குடும்பத்தின் ஆட்சிக்கு எதிராக நீண்ட காலமாகவே எதிர்ப்பு நிலவி வரும் ஒரு பகுதி அதுவாகும்.

மரண தண்டனையை எதிர்கொள்ளும் இரு இளைஞர்கள்: இளவரசர் வில்லியமிடம் கெஞ்சும் குடும்பம் | Families Saudi Protesters Beg William

சுயநினைவை இழந்து

மேலும், கடந்த 2011 மற்றும் 2012ல் அரபு புரட்சியின் போது, இவர்கள் சிறார்களாக இருந்தபோது கலந்துகொண்ட போராட்டங்களாகும். யூசெஃப் 15 வயதில் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டது தொடர்பான குற்றங்களுக்காக 2017 ஆம் ஆண்டு, 20 வயதில் கைது செய்யப்பட்டார்.

தற்போது 29 வயதாகும் யூசெஃபிற்கு அவரது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளவும் அனுமதி மறுக்கப்பட்டது, மேலும் கைதுக்கு பின்னர் ஐந்து மாதங்கள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார்.

அவரது காயங்கள் மிகவும் கடுமையானதாக இருந்ததால், அவர் சுயநினைவை இழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

போராட்டங்களில் பங்கேற்றது தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் ஜவாத் 2020-ல் கைது செய்யப்பட்டார். அவருக்கு 13 வயது மட்டுமே இருந்தபோது ஒரு போராட்டத்தில் கலந்துகொண்டார்.

மரண தண்டனையை எதிர்கொள்ளும் இரு இளைஞர்கள்: இளவரசர் வில்லியமிடம் கெஞ்சும் குடும்பம் | Families Saudi Protesters Beg William

கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜவாத் சுமார் ஒன்பது மாதங்கள் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டதாகவும், கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டதாகவும், மரண தண்டனை விதிக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு வாக்குமூலத்தில் கையெழுத்திட வற்புறுத்தப்பட்டதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தற்போது அவருக்கு வயது 28. இந்த நிலையிலேயே, அந்த இருவரின் குடும்பங்கள் இளவரசர் வில்லியம் இந்த வழக்கில் தலையிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் கடிதம் எழுதியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US