ஜேர்மனியில் தீவிபத்தில் பலியான இந்தியர்கள்: சில கூடுதல் தகவல்கள்
Three families in Kerala are awaiting the return of the mortal remains of their loved ones who died in Germany: ஜேர்மனியில் உயிரிழந்த தங்கள் பிள்ளைகளின் உடல்கள் நாடு திரும்புவதற்காக கேரளாவில் மூன்று குடும்பங்கள் காத்திருக்கின்றன.
ஒரு நல்ல வாழ்வைத் தேடி ஜேர்மனிக்கு புறப்பட்ட மூன்று இளைஞர்களின் கனவுகளை தீவிபத்தொன்று கலைத்துப்போட்ட துயரம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்து மூன்று பேருக்கு நேர்ந்த துயரம்
செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.15 மணியளவில், மேற்கு ஜேர்மனியிலுள்ள Bochum என்னுமிடத்தில் அமைந்துள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றில் தீப்பற்றியுள்ளது.

அந்தத் தீயில் சிக்கி, கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துவிட்டார்கள்.
கேரளாவிலுள்ள கொல்லம் என்னுமிடத்தைச் சேர்ந்த அஞ்சலி ஷீலா ஜாய் (27), எர்ணாகுளம் என்னுமிடத்தைச் சேர்ந்த சிவின் ஜானி (26) மற்றும் இடுக்கி என்னுமிடத்தைச் சேர்ந்த நோவா சாபு (25) என்பவர்களே உயிரிழந்துள்ளார்கள்.
அவர்களில், அஞ்சலி வேலை தேடி ஜேர்மனி சென்றுள்ளார். நோவா தன் படிப்புக்காக சென்றுள்ளார். இருவரும் ஜூலை மாதம்தான் ஜேர்மனிக்கு சென்றுள்ளனர். வேலை தேடிச் சென்ற ஜானி இந்த வாரம் வேலையில் சேருவதாக இருந்துள்ளது, அவர் சென்ற மாதம்தான் ஜேர்மனி சென்றுள்ளார்.
இந்நிலையில், பிள்ளைகளுக்கு இறுதிச்சடங்கு செய்வதற்காக, அவர்களுடைய உடல்கள் இந்தியா வருவதற்காக அவர்களுடைய குடும்பங்கள் கவலையும் கண்ணீருமாக காத்திருக்கின்றன.
இந்நிலையில், ஜேர்மனியிலுள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Three Indian nationals (two women and one man) have tragically lost their lives in a fire incident in Bochum, North Rhine-Westphalia, Germany. All 3 were studying in Germany. Embassy of India in Berlin and Consulate General of India in Frankfurt are in contact with local authorities and the bereaved families, and are extending all necessary assistance. The incident is under investigation by German authorities. We extend our deepest condolences to the bereaved families in this hour of grief. @MEAIndia
— India in Germany (@eoiberlin) October 14, 2026
அத்துடன், அவர்களுடைய மரணம் தொடர்பில் ஜேர்மன் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருவதாகவும் தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பிள்ளைகள் தங்கியிருந்த வீடு தீப்பற்றிய நிலையில், அந்த வீட்டுக்கு வேண்டுமென்றே தீவைத்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில், ரொமேனியா நாட்டவரான 41 வயது நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.