ஜேர்மனி விமான நிலையத்தில் விஷப்பாம்புகளை கடத்த முயன்றவர் கைது

Snake
By Ragavan Oct 15, 2026 07:58 PM GMT
Report

German Airport Stops Snake Smuggler: ஜேர்மனி விமான நிலையத்தில் விஷப்பாம்புகள், பல்லிகள் கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.

விஷப்பாம்புகளை கடத்த முயன்ற தீயணைப்பு வீரர்

ஜேர்மனியின் Cologne Bonn விமான நிலையத்தில், 45 வயது மெக்சிகோ தீயணைப்பு வீரர் ஒருவர் 90-க்கும் மேற்பட்ட பல்லிகள் மற்றும் விஷப்பாம்புகளை கடத்த முயன்றபோது சுங்க அதிகாரிகளால் தடுக்கப்பட்டார்.

German-Airport-Stops-Snake-Smuggler

அந்த நபர் nothing to declare என்ற பச்சை வழித்தடம் வழியாக செல்ல முயன்றபோது, அவர் மிகவும் பதட்டமாக இருந்ததால் அதிகாரிகள் சந்தேகித்தனர்.

முதலில் அவரிடம் போதைப்பொருள் பரிசோதனை நடத்தப்பட்டதில், கோகெயின் பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது. பின்னர் அவரது பயணப்பெட்டியை சோதித்தபோது, விபர்கள், ராட்டில்ஸ்நேக் உள்ளிட்ட பல்வேறு விஷப்பாம்புகள் மற்றும் இகுவானா போன்ற பல்லிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

தெற்கு ஆசியாவில் பட்டினியால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடு

தெற்கு ஆசியாவில் பட்டினியால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடு

இதுவே முதல் முறை

சுங்க அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் ஜென்ஸ் அஹ்லாந்த், “எங்கள் அதிகாரிகள் பல்வேறு சூவினியர்களை (souvenirs) பார்த்திருக்கிறார்கள். ஆனால் உயிருள்ள 37 விஷப்பாம்புகள் மற்றும் 55 பல்லிகளை ஒரே நேரத்தில் கண்டுபிடித்தது இதுவே முதல் முறை” எனக் கூறினார்.

சில உயிரினங்கள் மனிதாபிமானமற்ற சூழலில் வைக்கப்பட்டிருந்தன, சில உயிரினங்கள் பயணத்தின் போது இறந்துவிட்டன.

German-Airport-Stops-Snake-Smuggler

அந்த நபர், “ஒரு பிரேசிலிய நண்பருக்காகவே இந்த உயிரினங்களை கொண்டு வந்தேன்” என்று அதிகாரிகளிடம் தெரிவித்தார். அவருக்கு ஜேர்மனியில் நுழைவு மறுக்கப்பட்டு, மீண்டும் இஸ்தான்புல் அனுப்பப்பட்டார். உயிருடன் மீட்கப்பட்ட பாம்புகள் மற்றும் பல்லிகள் தற்போது ஜேர்மனியில் உள்ள ஒரு பாம்பு பண்ணையில் பராமரிக்கப்படுகின்றன.

துபாய் Big Ticket லொட்டரியில் ரூ.1.3 கோடி வென்ற இந்திய சாரதி

துபாய் Big Ticket லொட்டரியில் ரூ.1.3 கோடி வென்ற இந்திய சாரதி

கடந்த ஆண்டு மட்டும் ஜெர்மனியில் 56,600க்கும் மேற்பட்ட பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் கடத்தப்பட்டதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம், உலகளவில் சட்டவிரோத விலங்கு வர்த்தகம் இன்னும் மிகப் பெரிய சவாலாக இருப்பதை மீண்டும் வெளிப்படுத்துகிறது.

ஒரே நேரத்தில் 8 அரசு பணிகளில் வேலை செய்து பிரித்தானிய ஊழியர் மோசடி

ஒரே நேரத்தில் 8 அரசு பணிகளில் வேலை செய்து பிரித்தானிய ஊழியர் மோசடி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US