தெற்கு ஆசியாவில் பட்டினியால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடு
Pakistan Lowest in South Asia Hunger Index: தற்போது தெற்காசியாவில் பட்டினியால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடாக பாகிஸ்தான் அறியப்படுகிறது.
ட்டினியால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட பாகிஸ்தான்
2026-ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பட்டினி குறியீட்டில் (Global Hunger Index) பாகிஸ்தான் மிகக் குறைந்த நிலையைப் பெற்றுள்ளது.
தெற்கு ஆசியா முழுவதும் பட்டினியை குறைக்கும் முயற்சிகள் மந்தமாகி வரும் நிலையில், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் 2018-க்குப் பிறகு நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

“உணவு பாதுகாப்பு இல்லாமல் பாதுகாப்பு இல்லை” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையை ஜேர்மன் உதவி அமைப்பு Welthungerhilfe, Ruhr University Bochum மற்றும் சுவிஸ் அமைப்பு Helvetas இணைந்து தயாரித்துள்ளன.
பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடி, உணவுப் பொருட்களின் விலை உயர்வு, காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் வறட்சி, சர்வதேச மோதல்கள் ஆகியவை மக்கள் வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளன.
இதனால் குடும்பங்களின் வாங்கும் திறன் குறைந்து, போதுமான மற்றும் சத்தான உணவுகளைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 2018-இல் குறைந்த நிலையில் இருந்த பட்டினியின் அளவீடு தற்போது நடுத்தர நிலைக்கு உயர்ந்துள்ளது.
குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு (child wasting) மிகக் கடுமையான நிலையை எட்டியுள்ளது. குழந்தைகள் வளர்ச்சி குறைபாடு (stunting) குறைந்தாலும், குழந்தை மரண விகிதம் இன்னும் நடுத்தர நிலையில் உள்ளது.
தெற்கு ஆசியா முழுவதும் பசியின் குறியீட்டு மதிப்பெண் 23.5-ஆக உள்ளது. இது “கடுமையான” பிரிவில் வருவதாக அறிக்கை கூறுகிறது. 2000-ஆம் ஆண்டில் 37.5 இருந்த மதிப்பெண் குறைந்தாலும், 2018-க்குப் பிறகு முன்னேற்றம் நின்றுவிட்டது. மேலும், கடுமையான மழை, வெள்ளம், அதிக வெப்பம் போன்ற காலநிலை மாற்றங்கள் விவசாய உற்பத்தியை பாதித்து, உணவு பாதுகாப்பை மேலும் சீர்குலைத்துள்ளன.
ஐ.நா. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) கணக்கீட்டின்படி, 2023-2025 காலத்தில் தெற்கு ஆசியாவில் மட்டும் 218 மில்லியன் மக்கள் போதுமான உணவின்றி வாழ்ந்துள்ளனர். இது உலகளவில் பட்டினியால் பாதிக்கப்பட்ட மக்களின் மூன்றில் ஒரு பங்கை குறிக்கிறது.
இந்த நிலைமை, பொருளாதாரத்தை வலுப்படுத்துதல், சத்தான உணவுகளுக்கான அணுகலை மேம்படுத்துதல் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் விவசாய முறைகளை வலுப்படுத்துதல் அவசியம் என்பதை வலியுறுத்துகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |