கார் துரத்தலில் பலியான 24 வயது பிரித்தானிய பெண்: உயிருக்கு போராடும் மற்றொருவர்..துயரத்தில் குடும்பம்
பிரித்தானியாவில் சமீபத்தில் கார் விபத்தில் இளம் பெண்ணொருவர் பலியான நிலையில், நிதி திரட்டலில் ஈடுபட்டுள்ள அவரது குடும்பத்தினர் உருக்கத்துடன் பேசியுள்ளனர்.
24 வயது இளம்பெண்
கடந்த மார்ச் 1ஆம் திகதி, பிரித்தானியாவில் காவல்துறையின் அதிவேக கார் துரத்தலின்போது, எடின்பர்க்கை சேர்ந்த டெய்லர் ஜென்கின்ஸ் என்ற 24 வயது பெண் உயிரிழந்தார்.

இதனையடுத்து அவரது குடும்பத்தினர் இறுதிச் சடங்கு மற்றும் அது சார்ந்த பிற செலவுகளை சமாளிக்க உதவும் வகையில், அவரது குடும்பத்தினர் தற்போது ஒரு நிதி திரட்டும் முயற்சியைத் தொடங்கியுள்ளனர்.
மேலும், உயிரிழந்த இளம்பெண் குறித்து அவர்கள் கூறுகையில், "டெய்லர் ஜென்கின்ஸின் இழப்பு கற்பனை செய்ய முடியாத சோகம். எங்கள் அனைவரின் வாழ்க்கையிலும் விவரிக்க முடியாத வெறுமையை விட்டுச் சென்றது.
மார்ச் 1, 2026 அன்று எங்கள் அழகான டெய்லர் 24 வயதில் எங்களிடம் இருந்து துயரகரமாக பிரிக்கப்பட்டபோது எங்கள் இதயங்கள் உடைந்தன. திரட்டப்படும் ஒவ்வொரு பென்னியும் குடும்பத்தின் நிதிச்சுமையைக் குறைத்து, டெய்லரின் வாழ்க்கையை கௌரவப்படுத்துவதில் கவனம் செலுத்த அனுமதிக்கும்" என்றனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில்
இதற்கிடையில், டெய்லர் விபத்தில் சிக்கியபோது மற்றொரு பயணியும் படுகாயமடைந்தார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருந்ததாக கூறப்படுகிறது.
ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்பட்டு கைதான கேன் பர்ராக்ஹெர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். அவரிடம் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் எதுவும் கோரப்படவில்லை; அவர் மார்ச் 31ஆம் திகதி அன்று Newcastle Crown நீதிமன்றத்தில் நிறுத்தப்பட உள்ளார்.
இந்தச் சம்பவம் நிகழ்ந்ததற்கான சூழ்நிலைகள் குறித்து விசாரணையை Independent Office for Police Conduct தொடங்கியுள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |