வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய உடனே மொத்த குடும்பமும் தற்கொலை! கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்
கேரளாவை சேர்ந்த மொத்த குடும்பமும் வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டில் இருந்து திரும்பிய குடும்ப தலைவர்
திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ரமேஷன் (48). இவர் வளைகுடா நாட்டில் வேலை செய்து வந்த நிலையில் கடந்த வியாழன் அன்று சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு ரமேஷன் வீட்டில் நெருப்பு எரிவதை கண்ட அக்கம்பக்கத்தினர் பதறியடி போய் கதவை உடைத்து உள்ளே பார்த்தனர்.
அப்போது ரமேஷன், அவர் மனைவி சுலஜா குமாரி (46), மகள் ரேஷ்மா (23) ஆகிய மூவரும் சடலமாக கிடந்தனர். கடன் தொல்லையால் மூவரும் தற்கொலை செய்து கொண்டது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
keralakaumudi
கடன் தொல்லை
அதன்படி, ரமேஷனுக்கு பெரும் கடன் இருந்ததாகவும், பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
வங்கியில் கடனை திருப்பிச் செலுத்தத் தவறியதால் குடும்பம் வீட்டை விட்டு வெளியேற்றப்படும் நிலையை எதிர்கொண்டதும் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து பொலிசார் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றனர்.