ஒலிம்பிக்கில் மீராபாய் பதக்கம் வென்றதை நேரலையில் கண்டு ஆனந்த கண்ணீர் வடித்த குடும்பத்தினர்! நெகிழ வைக்கும் காட்சி
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை மீராபாய் வெள்ளிப் பதக்கம் வென்றதை தொலைகாட்சி நேரலையில் கண்டு குடும்பத்தினர் ஆனந்த கண்ணீர் வடித்த காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் நடந்த பெண்கள் பளு தூக்கும் போட்டியில் 49 கிலோ பிரிவில் இந்தியா வீராங்கனை மீராபாய் அதிகட்சமாக 115 கிலோ பளு தூக்கி இரண்டாவது இடம் பிடித்து வெள்ளப்பதக்கம் வென்றார்.
சீனாவின் Hou Zhihui அதிகட்பசமாக 116 கிலோ பளு தூக்கி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
இந்தோனேசியாவில் Windy cantika அதிகபட்சமாக 110 கிலோ பளு தூக்கி 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
மீராபாய் பதக்கம் வென்றதை மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இம்பால் நகரில் இருக்கும் அவரது குடும்பத்தினர் தொலைக்காட்சி நேரலையில் கண்டு ஆனந்த கண்ணீரில் திகைத்துள்ளனர்.
குறித்த நெகிழ வைக்கும் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க பட்டியிலை திறந்த வைத்த மீராபாய்-க்கு இந்திய பிரதமர் மோடி, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் மற்றும் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
#WATCH | Manipur: Family and neighbours of weightlifter Mirabai Chanu burst into celebrations as they watch her win the #Silver medal for India in Women's 49kg category. #OlympicGames pic.twitter.com/F2CjdwpPDc
— ANI (@ANI) July 24, 2021
இன்று நாங்கள் மிகவும் மகிழச்சியாக இருக்கிறோம். இது மீராபாயின் கடின உழைப்பிற்கு கிடைத்த பரிவு. அவரால் இந்தியா மற்றும் மணிப்பூர் பெருமைடந்துள்ளது என இம்பாலில் உள்ள மீராபாயின் உறவினர் தெரிவித்துள்ளார்.