நேபாள பெருவெள்ளத்தில் மாயமான பெண்: தொடர்ந்து ஒலிக்கும் மொபைல்
Family clings to hope for missing Toronto based techie: ரொரன்றோவில் வாழ்ந்துவந்த பெண்ணொருவர் நேபாள பெருவெள்ளத்தில் மாயமான நிலையில், அவரது மொபைல் இன்னமும் பயன்பாட்டில் உள்ளது தெரியவந்துள்ளது.
ரொரன்றோவில் வாழ்ந்துவந்த பெண்ணொருவர் நேபாள பெருவெள்ளத்தில் மாயமான நிலையில், அவரது மொபைல் இன்னமும் பயன்பாட்டில் உள்ளதால் அவர் பத்திரமாக இருக்கக்கூடும் என அவரது குடும்பத்தினருக்கு நம்பிகை ஏற்பட்டுள்ளது.

நேபாள பெருவெள்ளத்தில் மாயமான பெண்
ரொரன்றோவில் வாழ்ந்துவந்த இந்தியப் பெண்ணான ஸ்வாதி (Swati Bagrecha, 50), நேபாளப் பெருவெள்ளத்தின்போது மாயமானவர்களில் ஒருவர்.
ஸ்வாதி நேபாளத்துக்கு புனித யாத்திரை சென்ற நிலையில், அவரது மகளான அனுஷ்கா (14), ஸ்வாதியின் சகோதரியுடன் இந்தியாவின் மும்பை நகரில் தங்கியுள்ளார்.
விடயம் என்னவென்றால், ஸ்வாதியை அவரது மொபைலில் தொடர்பு கொள்ள முயலும்போது, அவரது மொபைல் இன்னமும் ஒலிக்கிறது. அதாவது, மொபைல் இன்னமும் பயன்பாட்டில் உள்ளது என்பது தெரியவந்துள்ளது.
அவருக்கு என்ன ஆயிற்று என்பது தெரியாமல் அவரது குடும்பத்தினர் கவலையடைந்துள்ள அதே நேரத்தில், அவரது மொபைல் இன்னமும் பயன்பாட்டில் உள்ளதால், அவர் பத்திரமாக இருக்கக்கூடும் என அவரது குடும்பத்தினருக்கு நம்பிக்கை உருவாகியுள்ளது.
கடைசியாக அவரது மொபைல் சீன எல்லையருகே பயன்பாட்டில் இருந்ததாக தெரிவித்துள்ள ஸ்வாதியின் சகோதரரான ப்ரஷாந்த், என்றாலும், அவரது மொபைல் எண் ரொரன்றோவில் பதிவு செய்யப்பட்டது என்பதால், அதை கண்காணிப்பது கடினமாக உள்ளதாகத் தெரிவிக்கிறார்.
ஆகவே, ஸ்வாதியைக் கண்டுபிடிக்க உதவுமாறு, நேபாளத்தில் உள்ள இந்திய மற்றும் சீன தூதரங்களை அணுகியுள்ளதாக ஸ்வாதியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |