குண்டு வெடிப்பில் பெற்றோரை இழந்த சிறுமி: 2 ஆண்டுக்குப் பின்பு தன் உறவினர்களை சந்தித்த உணர்வுபூர்வமான தருணம்
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்கும்போது நடந்த குண்டு வெடிப்பின்போது தொலைந்து போன சிறுமியை மீண்டும் அவரது உறவினர்கள் சந்தித்த தருணம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
பெற்றோரை இழந்த சிறுமி
கடந்த 2021-ஆம் ஆண்டு தாலிபான்கள், ஆப்கானிஸ்தானை நாட்டை கைப்பற்ற நடத்திய குண்டு வெடிப்பில் தனது பெற்றோரை இழந்த மரியம் என்ற குழந்தை கத்தாரிலுள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து வந்துள்ளது.
இரண்டு வருடங்களுக்கு பிறகு மரியத்தின் உறவினர்களான முகமது நியாசி மற்றும் சிறுமியின் சகோதர, சகோதரிகள் கத்தாரிலுள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் சந்தித்த நிகழ்வு அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
@Doha News
“ மீண்டும் இவளை நான் பார்ப்பேன் என நினைத்து கூட பார்க்கவில்லை” என உணர்வுப் பூர்வமாக பேசிய நியாசிக்கு நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள். ”அவள் காணாமல் போன பின்பு உயிரோடு தான் இருப்பாள் என நான் நம்பினேன்” என கூறியுள்ளார்.
நெகிழ்ச்சியான சந்திப்பு
கடந்த ஆகஸ்ட் 2021 ல் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றும் போது நடந்த மிகப்பெரிய குண்டு வெடிப்பில் மரியாவின் பெற்றோர் உட்பட 183 பேர் இறந்திருக்கிறார்கள்.
@epa
அப்போது அலிசா என்ற பிறப்பு பெயரை கொண்ட கை குழந்தை மட்டும் உயிரோடு இருந்திருக்கிறது. உடனே அந்த சிறுமியை அமெரிக்க ராணுவ விமானத்தின் மூலம் ஏற்றிச் சென்று கத்தாரிலுள்ள அனாதை இல்லத்தில் சேர்த்துள்ளனர்.
அங்கு கிட்ட தட்ட 200 ஆப்கான் குழந்தைகளோடு அலிசாவிற்கு மரியம் என பெயர் வைக்கப்பட்டு சிறப்பு கவனிப்புடன் வளர்க்கப்பட்டுள்ளார்.
@Doha News
இந்த நிலையில் ஐக்கிய அரசு நிர்வாகம் பிரிந்த குடும்பத்தை ஒன்றிணைக்கும் திட்டத்தின் கீழ் மரியத்தின் குடும்பத்தை ஒன்றிணைத்திருக்கிறது.
மரபணு சோதனை
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்த நியாசியின் கோரிக்கையின்படி, மரியமிற்கு எடுக்கப்பட்ட மரபணு சோதனைக்குப் பிறகு அவள் தங்கள் குடும்பத்தை சேர்ந்தவள் என உறுதி செய்யப்பட்டதும், நியாசி குடும்பத்தார் கத்தாருக்கு சென்றுள்ளனர்.
@Doha News
நியாசி தனது மனைவி மற்றும் இப்போது அவர்களின் பராமரிப்பில் உள்ள எட்டு குழந்தைகளுடன் சேர்ந்து அமெரிக்காவிற்குச் செல்லும் செயல்முறையைத் தொடங்குவதாக கூறியுள்ளார்.
"நாங்கள் எங்காவது பாதுகாப்பாக இருக்க விரும்புகிறோம்," என்று நியாசி பத்திரிக்கையாளரிடம் தெரிவித்துள்ளார்.
சமூக சேவையாளர்கள் மரியத்திற்கும் அவளது சகோதர சகோதரிகளுக்கும் சில ஆலோசனைகளை வழங்குவார்கள். எனவே அவர்கள் மெதுவாக ஒருவரையொருவர் அறிந்துகொள்ள முடியும் என தெரிவித்துள்ளனர்.