அமெரிக்க நகரமொன்றை உலுக்கிய திகில் சம்பவம்
அமெரிக்காவின் அலபாமா நகரில் துப்பாக்கிச்சூட்டு காயங்களால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துயர சம்பவம்
அலபாமாவின் கடற்கரை நகரமான Daphneஐச் சேர்ந்தவர் லாரிகா கெய்ன்ஸ் ஸ்மித் (41).
இவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து பொலிஸாருக்கு அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, அதிகாலையில் அதிகாரிகள் லாரிகாவின் வீட்டிற்கு விரைந்தனர்.
அங்கு லாரிகா, அவரது கணவர் கென்னத் (44) மற்றும் இரண்டு பிள்ளைகளான கிறிஸ்டியன் ஸ்மித் (15), கின்ஸ்லே ஸ்மித் (11) ஆகியோர் துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் இறந்து கிடந்தனர்.
துப்பாக்கியால்
காட்சிகளை பார்க்கும்போது கென்னத் அவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருக்கலாம் என புலனாய்வாளர்கள் நம்புகின்றனர்.
WALA ஊடகத்தின்படி, சம்பவ இடத்தில் கிடைத்த தடயவியல் மற்றும் சூழ்நிலை ஆதாரங்களைப் பயன்படுத்தி, மீட்கப்பட்ட கைத்துப்பாக்கி ஆகியவை மூலம் குடும்பத் தலைவர் கென்னத்தான் இந்த பயங்கரத்தை அரங்கேற்றியிருக்கிறார் என்பதை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் துயர மரணம், Daphne நகரத்தையே உலுக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |